போப் பிரான்சிஸ் உடல்நிலை என்னவாகும்.. நாஸ்ட்ரடாமஸ் விட்டு சென்ற பகீர் கணிப்பு.. வாடிகன் அழியுமாம்!
வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே வரலாற்று நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்த நாஸ்ட்ரடாமஸ், போப்பாண்டவர் உடல்நிலை குறித்து விட்டுச் சென்ற கணிப்புகள் பேசுபொருள் ஆகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அனைவருக்குமே எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வது பிடிக்கும். ஆனால், வெகு சிலருக்கு மட்டுமே எதிர்காலம் குறித்து ஓரளவுக்குக் கணித்துப் பார்க்கும் சக்தி இருக்கும்.

அதுபோல எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணித்தவர்களில் முக்கியமானவர் புகழ்பெற்ற நாஸ்ட்ரடாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் எதிர்காலம் குறித்துப் பல துல்லியமான கணிப்புகளை விட்டுச் சென்றதாக நம்பப்படுகிறது.
போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ் இப்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் நிலையில், நாஸ்ட்ரடாமஸ் போப் பிரான்சிஸ் மரணம் மற்றும் அவருக்குப் பின் யார் போப் பிரான்சிஸ் பதவிக்கு வருவார் என்பது குறித்து எல்லாம் துல்லியமாகக் கணித்து வைத்துள்ளதாக தி நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
நாஸ்ட்ரடாமஸ்
யாரோ ஒருவர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை நாம் ஏன் நம்ப வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு வரும். இவர் பல மிகப் பெரிய பேரழிவுகளைத் துல்லியமாகக் கணித்தவர். லண்டனின் பெரும் தீ விபத்து, ஹிட்லர் ஆதிக்கம், இரட்டை கோபுர தாக்குதல்கள், கொரோனா பெருந்தொற்று, ஜப்பான் பூகம்பம் எனப் பேரழிவுகளைத் துல்லியமாகக் கணித்தவர். இதன் காரணமாகவே இவரை "அழிவின் தீர்க்கதரிசி" என்றும் கூட சிலர் குறிப்பிடுகிறார்கள்.
1555இல் வெளியிடப்பட்ட அவரது புகழ்பெற்ற புத்தகமான லெஸ் ப்ரொபீடீஸ் என்ற புத்தகத்தில் நாஸ்ட்ரடாமஸ் தனது கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். அதில் அவர் போர்கள், இயற்கை பேரழிவுகள், அரசியல் எழுச்சிகள், தலைவர்களின் படுகொலைகள் குறித்து துல்லியமாகக் கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். அதில் குறிப்பாக போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்பாகவும் சில கணிப்புகளை நாஸ்ட்ரடாமஸ் விட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
வாடிகன் வீழ்ச்சி
அவர் தனது புத்தகத்தில் ஒரு வயதான போப்பாண்டவரின் மரணத்தைப் பற்றி விளக்கியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நாஸ்ட்ரடாமஸ் தனது கணிப்பில், "மிகவும் வயதான போப்பாண்டவர் மரணத்திற்குப் பிறகு, நடுத்தர வயதுடைய ஒரு ரோமன் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் பலவீனமானவர் என்ற விமர்சனம் முதலில் இருக்கலாம். ஆனால், அவர் நீண்ட காலம் பதவியில் இருந்து சிறப்பாக வழிநடத்துவார். பல இன்னல்களைச் சமாளிப்பார். இவை முடிந்ததும், ஏழு மலைகளின் நகரம் (வாடிகன்) அழிக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.
போப் பிரான்சிஸ் உடல்நிலை எப்படி இருக்கிறது?
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாஸ்ட்ரடாமஸின் இந்த கணிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பிலும் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் போப் பிரான்சிஸுக்கு ஆஸ்துமா போன்ற சுவாச நோய் அறிகுறி குறைந்துள்ளதாகவும் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாடிகன் நியூஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "போப் பிரான்சிஸுக்கு ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் எதுவும் இல்லை. அவரது லேசான சிறுநீரக செயலிழப்பு குறித்து தற்போது நாம் கவலைப்படத் தேவையில்லை.. சுவாசிக்க ஆக்சிஜன் உதவி தொடர்ந்து வழங்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் உடல்நிலை முன்னேறி வரும் சூழலில், அவர் மெல்லத் தனது வழக்கமான பணிகளையும் தொடங்கிவிட்டார். மேலும், போப் பிரான்சிஸ் உலகெங்கும் தனது உடல்நிலைக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துக் கொள்வதாக வாடிகன் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications