Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடைசி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது.. கோஹ்லி-அனுஷ்கா திருமணத்தில் நடந்த குளறுபடி

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா கடந்த திங்கள் கிழமை திருமணம் செய்து கொண்டனர்.

Subscribe to Oneindia Tamil

ரோம்: இத்தாலியில் உள்ள மிலன் நகரில் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா கடந்த திங்கள் கிழமை திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள்.

இந்த திருமணத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது இந்த திருமணத்தில் நடந்த சில குளறுபடிகள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இவர்கள் திருமணத்தில் எதுவுமே திட்டமிட்டப்படி நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக திருமணம் நடக்கும் இடமே கடைசி நொடியில் மாற்றப்பட்டு இருக்கிறது.

திருமணத்தை திட்டமிட்டவர்

திருமணத்தை திட்டமிட்டவர்

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் இருக்கும் 'டஸ்காணி' என்ற பகுதியில் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா திருமணம் ஒரு தனியார் இடத்தில் நடத்தப்பட்டது. இந்த திருமணத்திற்காக தேவிகா நரேன் என்ற வடிவமைப்பாளார் அழைக்கப்பட்டு இருந்தார். அவர்தான் திருமணம் நடப்பதற்காக வெளியே வித்தியாசமான பந்தலையும், அந்த தெரு முழுக்க பிரம்மாண்டமான அலங்காரங்களையும் செய்து இருந்தார்.

எல்லாமே மாறியது

எல்லாமே மாறியது

காலையில் அனுஷ்காவிற்கு மெஹந்தி வைக்கும் விழா நடந்து இருக்கிறது. ஆனால் காலையில் எல்லோரும் கண் விழிக்கும் போது அங்கு பனி மிகவும் அதிகமாக இருந்துள்ளது. பொதுவாகவே இந்த மாதத்தில் இத்தாலியில் திருமணமே நடக்காது என்று கூறப்படுகிறது. இந்த பனி அங்கு வெளியே செய்யப்பட்டு இருந்த அலங்காரம் மொத்தத்தையும் நாசப்படுத்தி இருக்கிறது.

இடம் மாறியது

இடம் மாறியது

இதையடுத்து திருமணம் நடக்கும் இடம் உடனடியாக மாற்றப்பட்டு இருக்கிறது. எல்லா அலங்காரமும் அப்படியே பெரிய உள் ஹாலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அனுஷ்கா சர்மா இறைபக்தி கொண்டவர் என்பதால் அதற்கு ஏற்றமாதிரி எல்லாமே மீண்டும் சரிசெய்யப்பட்டு இருக்கிறது . மேலும் அனைத்து இடங்களிலும் 'ரூமி' எழுதிய கவிதைகள் அடங்கிய வாசகங்கள் இடம்பெற்று உள்ளது. இந்த கடைசி நேர மாற்றம் அனைத்தும் 1 மணி நேரத்தில் நடந்துள்ளது.

யாருக்கும் தெரியாது

யாருக்கும் தெரியாது

இந்த திருமணத்திற்காக செய்யப்பட்ட வடிவமைப்பில் எந்த இடத்திலும் கோஹ்லி அனுஷ்கா என்ற பெயரே இடம்பெறவில்லை. மேலும் தேவிகா நரேன் தவிர வேறு யாருக்கும் அது கோஹ்லி, அனுஷ்கா திருமணம் என்று தெரியாமல் இருந்துள்ளது. இதனால் அனுஷ்காவின் நெருங்கிய தோழியான தேவிகாவே அவரை பெயர் சொல்லி அழைக்காமல் கல்யாண நாள் வரை 'மணப்பெண்' என்றே அழைத்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+