குர்தீஷ் படையினரிடம் சிக்கி கதறி அழும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி... வைரலாகும் வீடியோ!
பாக்தாத்: ஈராக்கில் குர்தீஷ் படையினரிடம் பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் கதறி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
ஈராக்கில் சன்னி பிரிவு முஸ்லிம்களின் ஆதரவுடன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. பல நகரங்களில் அரசு படைகளை விரட்டியடித்து ஆக்கிரமித்து உள்ளன. ஈராக் அரசு படைகளுக்கு ஆதரவாக குர்தீஷ் படைகளும் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈராக்கிற்கு ஆதரவாக குர்தீஷ் படையினருக்கு போர் ஆலோசனை வழங்க போர் தந்திர நிபுணர்கள் கொண்ட ஒரு பெரிய குழுவினை அமெரிக்கா அனுப்பி வைத்தது. மேலும், குர்தீஷ் படையினருக்கு ஏராளமான ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கி வருகிறது.

உலகையே மிரட்டுகிறது...
இது தவிர உலகையே மிரட்டி வரும் பெரும் தீவிரவாத அமைப்பாக ஐஎஸ்ஐஎஸ் உருவாகி வருகிறது. அவ்வப்போது வீடியோக்கள் மூலமும், தாக்குதல்கள் மூலமும் தங்களது கோர முகத்தை அந்த அமைப்பு உலகிற்குக் காட்டி வருகிறது. தீவிரவாதிகளுக்கு இதயம் இருக்கிறதா என்பதைக் கேட்கும் அளவிற்கு அவர்களது நடவடிக்கைகள் உள்ளது.

வீடியோ...
இந்நிலையில் குர்தீஷ் படையிடம் சிக்கிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் பயம் மற்றும் வலி காரணமாக அழுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

கதறி அழும் தீவிரவாதி...
அதில் கைகள் பின்புறம் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் ராணுவத்தினரின் கவச வண்டியில் அமர வைக்கப்பட்டுள்ளார். சாதாரண உடையில் காணப்படும் அவர் அழுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

வைரல்...
கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்த வீடியோ தற்போது மீண்டும் சமூகவலைதளங்கள் வாயிலாக வைரலாகியுள்ளது.

மற்றொரு நபர்...
அழும் கைதியின் உடலில் எந்தக் காயமும் கண்ணுக்குத் தெரியும் வகையில் இல்லை. அவருக்கு அருகிலேயே மற்றொரு நபர் அமர்ந்துள்ளார். ஆனால் அவர் அமைதியாக இருக்கிறார்.
நம்பிக்கை...
இந்த வீடியோவின் மூலம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் உள்ளுக்குள் பயம், வலி எல்லாம் இருக்கும். எனவே அவர்களை வீழ்த்துவது எளிது என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications