For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ட்விட்டரில் சேர்ந்த அல் கொய்தா: 1, 532 பேர் ஃபாலோ செய்கின்றனர்

By Siva
Google Oneindia Tamil News

Now, al Qaeda joins Twitter!
வாஷிங்டன்: தீவிரவாத அமைப்பான அல் கொய்தா ட்விட்டரில் இணைந்துள்ளது.

பயங்கர தீவிரவாத அமைப்பான அல் கொய்தாவின் உறுப்பினர்கள் செய்தி தெரிவிக்கவும், அறிக்கைகள் விடுவதற்கும் பயன்படுத்தும் இணையதளம் ஷமுக் அல் இஸ்லாம். இது தான் அல் கொய்தாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகும். தற்போது ஷமுக் அல் இஸ்லாம் ட்விட்டரில் கணக்கை துவங்கியுள்ளது. @shomokhalislam இது தான் அல் கொய்தாவின் ட்விட்டர் கணக்கின் பெயர்.

சிரியாவில் உள்ள அல்கொய்தா போராளிகளின் இரு பிரிவுகள், அல் நுஸ்ரா பகுதி மற்றும் ஈராக் குறித்து தான் ட்விட்டர் கணக்கை துவங்கியவுடன் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அல் கொய்தா கணக்கில் 29 ட்வீட்கள் போஸ்ட் செய்யப்பட்டுள்ளன. சில போராளிகள் உள்பட 1,532 பேர் அல் கொய்தா கணக்கை ட்விட்டரில் ஃபாலோ செய்கின்றனர். ஆனால் அல் கொய்தா ஒரே ஒரு கணக்கை மட்டும் ஃபாலோ செய்கிறது.

ஆன்லைன் ஜிகாத்திற்கு தீவிரவாத அமைப்புகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டன என்பதை இது காட்டுகிறது என்று தீவிரவாதத்திற்கு எதிரான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Terror outfit Al Qaeda has opened its account on microblogging site Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X