ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 9 ஆண்கள், சிறுவனை கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்
பெய்ரூட்: சிரியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகக் கூறி ஒன்பது ஆண்கள் மற்றும் ஒரு சிறுவனை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஓரினச்சேர்க்கையாளர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களை துப்பாக்கியால் சுட்டு அல்லது உயரமான கட்டிடங்களின் மேல் இருந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் மாகாணத்தில் இருக்கும் ரஸ்தான் நகரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகக் கூறி 7 ஆண்களை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

மேலும் வடக்கு சிரியாவில் உள்ள அலெப்போ மாகாணத்தில் இருக்கும் ரீத்தான் நகரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 2 ஆண்கள் மற்றும் ஒரு சிறுவனை தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.
பொது இடத்தில் மக்கள் முன்பு அவர்களை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவர்களின் கேமராவை பறித்து உடைத்துள்ளனர். சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் வைப்பது தான் சட்டம் என்று கூறி வருகின்றனர் தீவிரவாதிகள்.
ஓரினச்சேர்க்கை தவிர சூனியம் செய்வது, சிரிய அதிபர் பஷார் அல் ஆசாதுக்கு உண்மையாக இருப்பது ஆகிய குற்றங்களுக்கு தீவிரவாதிகள் மரண தண்டனை அளித்து வருகிறார்கள்.
அவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 1,800 பொதுமக்கள் உள்பட 3 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications