மிஸ் வேர்ல்டுக்குப் போட்டியாக முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி!
ஜகார்தா: மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டிக்குப் போட்டியாக, ஜகார்தாவில் முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி நடைபெறவுள்ளது.
மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி ஜகார்தாவிலிருந்து பாலி தீவுக்கு மாற்றப்பட்டு நடந்து வருகிறது.
முஸ்லீம் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக போட்டி பாலிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி ஒன்று ஜகார்தாவில் நடைபெறவுள்ளதாம்.

அழகிப் போட்டிக்குப் போட்டி
மிஸ் வேர்ல்ட் போட்டிக்கு எதிராகவும், அதைக் கண்டித்தும் இந்த முஸ்லீம் பெண்கள் அழகிப் போட்டி நடைபெறவுள்ளதாம்.

புதன்கிழமை
ஜகார்தாவில் புதன்கிழமையன்று இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து இதை நடத்தவுள்ளன.

முஸ்லீமா வேர்ல்ட் போட்டி
இந்தப் போட்டிக்கு முஸ்லீமா வேர்ல்ட் போட்டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போட்டி நிறுவனரான ஈகா சாந்தி கூறுகையில், மிஸ் வேர்ல்ட் போட்டிக்கு முஸ்லீம் உலகம் தரும் பதிலடி இது என்றார்.

ரோல் மாடலுக்கான போட்டி
இதுவும் அழகிப் போட்டிதான். ஆனால் மிஸ் வேர்ல்டுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இது தன்னம்பிக்கை தரும் போட்டியாகும். ரோல் மாடலாக திகழ்வதற்கான போட்டியாகும் இது. இன்றைய நவீன உலகில் மதக் கோட்பாடுகளை எப்படிக் கடைப்படிப்பது, சமச்சீரை எப்படி கடைப்பிடிப்பது என்பதைச் சொல்லித் தரும் போட்டியாகும் இது என்றார் அவர்.

20 அழகிகள் பங்கேற்பு
முஸ்லீமா வேர்ல்ட் அழகிப் போட்டிக்கான அழகிகள் தேர்வு ஆன்லைன் மூலம் நடந்தது. 500 பேர் கலந்து கொண்டதில் 20 பேர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகயுள்ளனராம். குரான் வாசகங்களைகப் படிப்பது, இஸ்லாமியக் கதைகள் ஒப்புவித்தல், இஸ்லாமிய மத உடைகளை அணிவதில் கடைப்பிடிக்கப்படும் மரபுகள் உள்ளிட்டவை குறித்து இந்த அழகிப் போட்டியில் கேள்விகள் கேட்கப்பட்டு இறுதிச் சுற்றுக்குப் பெண்கள் தேர்வாகியுள்ளனராம்.

ஈரான் முதல் இந்தோனேசியா வரை
இறுதிச் சுற்றில் இடம் பெற்றுள்ள பெண்கள் இந்தோனஏசியா, நைஜீரியா, வங்கதேசம், புரூணே, மலேசியா, ஈரான் உள்ளி்ட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இஸ்லாமிய உடையில் கேட் வாக்
இறுதிச் சுற்றுப் போட்டியின்போது இந்தப் பெண்கள் இஸ்லாமிய மத உடையில் கேட் வாக்கும் செல்லவுள்ளனராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications