ஷார்ஜாவில் நடைபெற்ற நிரித்யசமர்ப்பண்: இந்திய கிளாசிக்கல் நடன நிகழ்ச்சி
ஷார்ஜா: ஷார்ஜாவில் டிடிஎஸ் இவெண்ட்ஸ் சார்பில் நிரித்யசமர்ப்பண் எனும் இந்திய பாரம்பர்ய கிளாசிக்கல் நடன நிகழ்ச்சி 13.06.2014 அன்று மாலை ஷார்ஜா அமெரிக்கப் பல்கலைக்கழக கலையரங்கில் வெகு சிறப்புற நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு டிடிஎஸ் இவெண்ட்ஸ் தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். துவக்கமாக குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி துவங்கப்பட்டது. குரு கவிதா பிரசன்னா வரவேற்பு நடனம் நிகழ்த்தினார்.

வள்ளி திருமணம் நிகழ்வினை தத்ரூபமாக நடித்துக் காட்டிய மாணவியரின் நடிப்பனை அமீரகத்திலிருந்து விடைபெற்றுச் செல்ல இருக்கும் இந்திய துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபு வெகுவாகப் பாராட்டினார்.

அவரது மனைவி தனது உரையில், அமீரகத்திலிருந்து தாங்கள் விரைவில் விடைபெற இருந்தாலும் இங்கிருந்து அமீரகத் தமிழர்களின் அன்பினையே சுமந்து செல்வோம் எனக் குறிப்பிட்டார். குத்தாலம் ஏ லியாக்கத் அலி வாழ்த்துரை வழங்கினார்.

துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபுவிற்கு நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடை வழங்கி பிரசன்னா கௌரவித்தார். மேலும் சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் குப்தா, சைஃப் அல் ஜலால், அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியர்க்கு பரிசுகளை ஜெயந்தி மாலா சுரேஷ், சைஃப் அல் ஜலால், அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான் ஆகியோர் வழங்கினர்.

கவிதா பிரசன்னா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான அணுசரனையினை ரைட் மெடிக்கல் சென்டர், அல் நபூதா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ், அகல் குரூப் ஆஃப் கம்பெனி, அப்கிரேட் டயர்ஸ் சேஞ்சிங், பிளாக் துளிப் பிளவர், பிரான் சூஸ், அல் ராவாபி சூஸ், பெருமாள் பூக்கடை, அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ், இந்தியா சில்க் செண்டர், ஒன் இந்தியா, முதுகுளத்தூர்.காம் உள்ளிட்டவை செய்திருந்தன.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications