அவருடன் எந்த தொடரும் இல்லை.. "சீன உளவாளி" ஆலிஸ் குறித்து சிங்கப்பூர் மெகாஸ்பீட் திடீர் விளக்கம்!
சிங்கப்பூர்: என்விடியா முன்னாள் சிஇஓ ஜென்சன் உடன் கள்ள உறவில் இருந்த ஆலிஸ் ஹுவாங் சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் நிலையில், இந்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. இதற்கிடையே ஆலிஸ் கடைசியாக வேலை செய்த சிங்கப்பூரை சேர்ந்த மெகாஸ்பீட் நிறுவனம் தங்களுக்கும் அவருக்கும் எந்த தொடரும் இல்லை எனவும் 2025ம் ஆண்டிலேயே அவர் தங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட்டதாக விளக்கம் கொடுத்துள்ளது.
உலகின் மிக முக்கிய ஏஐ சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா நிறுவனத்தின் சிஇஓவாக இருந்தவர் ஜென்சன். இவர் சிங்கப்பூரின் மெகாஸ்பீட் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் கள்ள உறவில் இருந்துள்ளார். சீனாவை சேர்ந்த ஆலிஸ் ஹுவாங்கிற்கு அந்நாட்டின் உளவு துறையுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சீன உளவாளி
ஆலிஸ் ஹுவாங் மூலம் சீன உளவுத்துறை தனக்கு வேண்டியதை எல்லாம் சாதித்து விட்டதாக சொல்கிறார்கள். குறிப்பாக அதிநவீன சிப்களை என்விடியா சீனாவுக்கு விற்க தடை விதித்திருந்த நிலையில், அதை தாண்டி சிப்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம் எனவும் அதற்கு ஜென்சன்- ஆலிஸ் கள்ள உறவு பயன்பட்டு இருக்கலாம் எனவும் சொல்லப்பட்டது.
விளக்கம்
இந்த சர்ச்சைகளால் ஆலிஸ் ஹுவாங் வேலை செய்த மெகாஸ்பீட் நிறுவனமும் தொடர்ந்து சில நாட்களாகவே சர்ச்சையில் சிக்கி வந்தது. இந்த சூழலில் தான் மெகாஸ்பீட் அதிகாரப்பூர்வமாக ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளது. அதாவது ஆலிஸ் ஹுவாங் கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி மெகாஸ்பீட் நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது அவர் தங்கள் நிறுவனத்துடன் எந்த வகையிலும் தொடர்பில் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், ஆலிஸ் ஹுவாங்கின் தனிப்பட்ட மற்றும் சொந்த விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
சீன உளவுத்துறையுடன் ஆலிஸ் ஹுவாங்குக்கு தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ஆலிஸ் ஹுவாங்கை சீன உளவுத்துறையின் உளவாளியாகக் கருதுவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
மறுப்பு
இதற்கிடையே தனது பிஸ்னஸ் மற்றும் விநியோக சங்கிலி தொடர்பாக வெளியாகும் குற்றச்சாட்டுகளையும் மெகாஸ்பீட் மறுத்துள்ளது. சட்டப்பூர்வமாகவே அனைத்து பிஸ்னஸ்களையும் செய்வதாக கூறியுள்ள மெகாஸ்பீட், தங்கள் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
மெகாஸ்பீட் நிறுவனம் ஆசிய பிராந்தியத்தில் என்விடியாவின் கம்ப்யூட்டிங் பவர் கிளவுட் பிஸ்னஸின் முக்கிய பார்ட்னராக தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறது. என்விடியாவின் GPU, அதாவது கிராபிக்ஸ் பிராசஸிங் யூனிட்கள் மூலம் கிடைக்கும் கம்ப்யூட்டிங் திறனை வாடகைக்கு கொடுப்பதே இதன் பிஸ்னஸாகும். தனது வர்த்தகத்தை சீனாவுக்கு சாதகமாக மெகாபீஸ்ட் மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்தான் அதை மறுத்துள்ளது.
பதவி விலகல்
இதற்கிடையே கள்ள உறவு சர்ச்சைகளால் ஜென்சன் ஹுவாங் கடந்த நவம்பர் 12ஆம் தேதி என்விடியா தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகினார். சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் ஆலிஸ் உடன் மட்டுமின்றி, அவரது நிறுவனத்தில் வேலை செய்த இன்னொரு பெண் நிர்வாகி உடனும் ஜென்சனுக்கு கள்ள உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் பதவி விலகினார். இதையடுத்து தலைமை நிதி அதிகாரியான கோலெட் கிரெஸ், இடைக்கால சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
