அரை நூற்றாண்டுக்குப் பின் மலேசியாவில் அமெரிக்க அதிபர்- ஒபாமாவுக்கு உற்சாக வரவேற்பு!!

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று மலேசியா வருகை தந்தார். சுமார் அரை நூற்றாண்டு காலத்துக்கு பிறகு மலேசியாவுக்கு வரும் முதலாவது அமெரிக்க அதிபர் என்பதால் ஒபாமாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் ஒபாமா ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக இன்று மலேசியா வந்த ஒபாமாவுக்கு விமான நிலையத்தில் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

Obama arrives in Malaysia

மலேசிய வெளியுறவு அமைச்சர், அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகள் விமான நிலையத்திற்கு நேரில் சென்று ஒபாமாவை வரவேற்றனர். அங்கிருந்து காரில் கோலாலம்பூர் நாடாளுமன்ற சதுக்கத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். தனது இரண்டு நாள் மலேசிய பயணத்தின்போது பிரதமர் நஜிப் ரசாக்கை சந்திக்கும் ஒபாமா, இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

பிரதமர் நஜீப் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியிலும் ஒபாமா பங்கேற்கிறார். மேலும் இளைஞர்களுடன் ஒபாமா கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

239 பயணிகளுடன் சீனாவுக்கு புறப்பட்ட மலேசிய விமானம் மாயமான விவகாரத்தால் உலக நாடுகள் கவனம் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், மலேசியாவுக்கு ஒபாமா வந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ஒபாமா வருகையையொட்டி மலேசியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+