பராக் ஒபாமாவின் அடுத்த பதவி நீதிபதி!

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil
ஒபாமா
JIM WATSON/AFP/Getty Images
ஒபாமா

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு, இல்லினாய் மாகாணத்திற்கான நீதிபதி பதவி வகிக்க அழைப்பு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெளிவான விளக்கங்கள் இன்னும் அளிக்கப்படாத நிலையில், அவர் அடுத்த மாதம் குக் கவுண்டி முன்பு தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

56 வயதாகும் ஒபாமா, சிவில் அல்லது குற்றவியல் வழக்குகளுக்காக அழைக்கப்படலாம் என்று தெரிகிறது.

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பிறகு, முன்னாள் அதிபர்கள் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் புஷ் ஆகியோருக்கும் இது போன்ற நீதிபதி தேர்வு அழைப்புகள் வந்தன.

ஹார்வட் சட்டக்கல்லூரியில் பட்டம்பெற்ற ஒபாமா, செனட்டிற்கு வருவதற்கு முன்பு, 12 ஆண்டுகள், சிகாக்கோ பல்கலைக்கழக ஆசிரியராக பணியாற்றினார்.

ஒரு குடிமகனாகவும், இந்த சமூகத்தில் ஒருவராகவும், தனது கடமையை செய்ய இருப்பதாக அவர், தனது பிரதிநிதிகள் மூலம், மிகவும் தெளிவாக கூறியுள்ளார். என்று சிகாக்கோ ட்ரிப்யூன் பத்திரிக்கையிடம், குக் கவுண்டி தலைமை நீதிபதி டிமோதி எவான்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், முன்னாள் அதிபரின் பாதுகாப்பிற்குதான் முன்னுரிமை என்றார். இது குறித்து, ஒபாமாவின் செய்திதொடர்பாளர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த கவுண்டியில் நீதிபதியாக பணியாற்றுபவர்களுக்கு, ஒருநாளுக்கு 17.25 டாலர் சம்பளமாக வழங்கப்படும்.

2004 ஆம் ஆண்டு, குக் கவுண்டி நீதிமன்றத்தில், பிரபல தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரீ ஒரு கொலை வழக்கை நீதிபதியாக இருந்து விசாரித்தார் என்று என்.பி.ஆர் தெரிவிக்கிறது.

ஜனவரி மாதம், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய ஒபாமா, கோடீஸ்வரர் ஒருவருடன் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது, இந்தோனேஷியாவில் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது போன்று தனது நேரத்தை செலவிட்டு வருவதைப் பார்க்க முடிந்தது.

பிற செய்திகள்:


BBC Tamil
English summary
Former US president Barack Obama has been summoned for jury duty in the state of Illinois and is planning to serve, a court official says.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற