'ஸ்டார்ட் மியூசிக்': அர்ஜென்டினாவில் டாங்கோ டான்ஸ் ஆடிய ஒபாமா

Subscribe to Oneindia Tamil

பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினா சென்ற அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அங்கு தனக்கு அளிக்கப்பட்ட விருந்தில் டாங்கோ நடனம் ஆடியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி மிஷலுடன் அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர்களுக்கு அர்ஜென்டினா அதிபர் மாரிசியோ மேக்ரி புதன்கிழமை இரவு விருந்து அளித்தார்.

நூற்றுக்கணக்கான முக்கிய நபர்கள் கலந்து கொண்ட அந்த விருந்தில் டாங்கோ டான்ஸர்கள் நடனம் ஆடினர். ஒரு ஆணும், பெண்ணும் டாங்கோ நடனம் ஆடினர். இந்நிலையில் திடீர் என்று அந்த பெண் டான்ஸர் ஒபாமா அருகில் வந்து அவரை தன்னுடன் சேர்ந்து நடனமாட வைத்தார்.

ஒபாமா ஆடத் துவங்கியதும் மிஷல் தனது இருக்கையில் இருந்து எழுந்து அங்கிருந்த ஆண் டான்ஸருடன் சேர்ந்து நடனமாடினார். ஒபாமாவும் சரி, மிஷலும் சரி அழகாக ஆடினார்கள்.

'

ஒபாமாவும், மிஷலும் நடனமாடியதை விருந்திற்கு வந்திருந்தவர்கள் ரசித்து பார்த்தனர். மிஷல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பாரம்பரிய மராட்டிய நடனத்தை ஆடி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+