நான் ஏன் யு.எஸ். வரும் இஸ்ரேல் பிரதமரை சந்திக்க மாட்டேன் தெரியுமா?: ஒபாமா விளக்கம்
வாஷிங்டன்: அமெரிக்கா வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவை தான் ஏன் சந்திக்கப் போவது இல்லை என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸின் சபாநாயகர் ஜான் போஹ்னர் வரும் மார்ச் மாதம் 3ம் தேதி நடக்கும் கூட்டு சபை கூட்டத்தில் பேசுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பேசுவதற்காக நேதன்யாஹு வாஷிங்டன் வருகிறார். ஆனால் அவரை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சந்தித்து பேசப் போவது இல்லை.
இந்நிலையில் இது குறித்து ஒபாமா, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில்,

இஸ்ரேலில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு முன்பு எந்த தலைவர்களையும் சந்தித்து பேசுவது இல்லை என்பது எங்களின் வழக்கம். எனக்கு என்ன தான் மெர்கலை பிடித்திருந்தாலும் ஜெர்மனியில் தேர்தல் நடக்கும் நேரத்தில் அவர் அமெரிக்கா வந்தால் வெள்ளை மாளிக்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட மாட்டாது. அவரும் என்னை சந்திக்க வேண்டும் என கேட்க மாட்டார் என்றார்.
அமெரிக்கா வரும் நேதன்யாஹு இஸ்ரேலுக்கு ஈரானால் தான் பேராபத்து என்பதை வலியுறுத்தி பேச உள்ளார் என்று கூறப்படுகிறது. நேதன்யாஹு அமெரிக்கா செல்வது இரு நாட்டு உறவுகளுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலிய கட்சிகள் கருதுகின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications