உலகின் மிகவும் செல்வாக்குமிக்க டீனேஜர்கள் பட்டியலில் ஒபாமா மகள்கள், மலாலா
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள்கள், நோபல் பரிசு வென்ற மலாலா உள்ளிட்டவர்கள் டைம் பத்திரிக்கையின் மிகவும் செல்வாக்குமிக்க பதின்வயதுடையோர்(டீனேஜர்) பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை மிகவும் செல்வாக்குமிக்க பதின்வயதுடையோர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவர்கள் சமூக வலைதளங்களில் எவ்வளவு பிரபலமாக உள்ளார்கள், வியாபாரத்தில் வெற்றி, கலாச்சாரத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
யாருக்கும் முதலாவது, இரண்டாவது என்று இடங்கள் வழங்கப்படவில்லை. 25 பேர் அடங்கிய பட்டியலில் 20 பேர் சிறுமிகள்.

ஒபாமா மகள்கள்
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மகள்கள் மால்யா(16) மற்றும் ஷாஷா(13) ஆகியோர் செல்வாக்கு மிக்க டீனேஜர்கள் ஆவர்.

மலாலா
அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ள பாகிஸ்தானி சிறுமி மலாலா யூசப்சாயும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

லூர்து
கிராமி விருது பெற்ற 17 வயது நியூசிலாந்து பாடகி லூர்து டைம் பத்திரிக்கையின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

ஷாஷா
டைம் பத்திரிக்கையின் செல்வாக்குமிக்க டீனேஜர்கள் பட்டியிலில் இடம்பிடித்துள்ள மிகவும் இளம் வயது நபர்கள் என்றால் அது ஒபாமாவின் இளைய மகள் ஷாஷா(13) மற்றும் பிலடெல்பியாவைச் சேர்ந்த பேஸ்பால் வீராங்கனை மோன் டேவிஸ்(13) ஆகியோர் தான்.

ஜேடன் ஸ்மித்
ஹாலிவுட் தம்பதி வில் ஸ்மித் மற்றும் ஜாடா பிங்கட் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித்(16) டைம் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications