'அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவேன்..'! - எதிர்காலத் திட்டம் பற்றி ஒபாமா!
சிகாகோ(யு.எஸ்) அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து இறங்கிய பிறகு சுமார் நான்கு மாதங்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் ஓய்வில் இருந்தார் ஒபாமா.
ஒய்வை முடித்துக் கொண்டு நேற்று சிகாகோவில் முதன் முறையாக முன்னாள் அதிபர் ஒபாமா பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சிகாகோ பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியாக இருந்தது. மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

முன்னாள் அதிபராக, அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதற்கு பாடுபடுவேன் என்று கூறினார்.
இளைஞர்கள் பொதுவாழ்க்கையிலும் அரசியலிலும் ஈடுபட வாருங்கள் என்று அழைப்பும் விடுத்தார்.
இளம் தலைவர்களை உருவாக்கி விட்டால், சூழலுக்கு ஏற்ப தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வல்லமையை அவர்களேப் பெற்றுக் கொள்வார்கள்.என்றார்.
தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமான முடிவு எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக களம் இறங்கப் போவதாகவும் கூறினார்.
குற்றவியல் சட்டங்களை சீரமைக்கும் பணியிலும் , அரசியலில் பணம் விளையாடுவதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.அதிபர் ட்ரம்பைப் பற்றி ஒபாமா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
மாறிவரும் தகவல் தொழில் நுட்ப உலகத்தில், அரசியலில் மீடியாவின் பங்கு எப்படி இருக்கும் என்றும் பேசினார். உடனுக்குடன் அனைத்து தகவல்களும், படங்களும், வீடியோக்களும் ஆன்லைனில் பகிர்ந்துக் கொள்ள்படுவது, அரசியல் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களுக்கு சவாலான விசயமாகும்;
பள்ளிக்காலத்தில் நான் செய்தவைகளை எல்லாம் படங்களாக வெளியிட்டு இருந்தால், நான் அதிபராக ஆகி இருக்க மாட்டேன் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
புதிய அவதாரம் எடுத்துள்ள ஒபாமாவின் தலையில் வெள்ளை முடி சற்று அதிகமாகவே காணப்படுகிறது. கிட்டத்தட்ட முழு வெள்ளை போலவே ஆகிவிட்டாலும் தலைக்கு சாயம் பூசவில்லை.
மாணவர்களுடனான உரையாடலில் ஒரு பொறுப்பான ஆசிரியர் போலவே ஒபாமா நடந்து கொண்டார் அதே வேளையில் அனைவருடனும் எளிமையாகப் பழகிப் பேசி, தோளில் தட்டி நட்பு பாராட்டி சாதாரண மனிதராகவே தன்னைக் காட்டிக் கொண்டார்.
-இர தினகர்
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications