மண்டேலாவுக்கு ஒபாமா நேரில் சிறப்பு அஞ்சலி!
வாஷிங்டன்(யு.எஸ்): தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபராக இருந்த நெல்சன் மண்டேலாவுக்கு, அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் பராக் ஒபாமா சிறப்பு அஞ்சலி செலுத்துகிறார்.
மறைந்த மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்த மனைவி மிஷல் ஒபாமா மற்றும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், அவரது மனைவி லாரா புஷ் ஆகியோருடன் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் மூலம் தென்னாப்பிரிக்கா செல்கிறார்.

முன்னாள் அதிபர் பில் க்ளிண்டனும் அஞ்சலி செலுத்த தென்னாப்பிரிக்கா செல்லவிருக்கிறார். அதிபர் ஒபாவுடன் செல்கிறாரா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. அவருடன் ஹிலரி க்ளிண்டனும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், அவர் தந்தையும் முன்னாள் அதிபரும் ஆன ஹெச்.டபுள்.யூ புஷ்ஷும் நேரில் சென்று மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்த விரும்பினார். ஆனால் 89 வயதான அவருடைய உடல் நிலை கருதி அந்த முடிவு கைவிடப்பட்டது.
இந்த நான்கு அமெரிக்க அதிபர்களும் நெல்சன் மண்டேலாவுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மண்டேலா மறைவுச் செய்தி கேட்டவுடன், அமெரிக்க கொடிகளை அரைக் கம்பத்திற்கு பறக்கவிட உத்தரவிட்டு, திங்கள் வரை துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
வெளி நாட்டு தலைவர்களுக்கு இப்படிப்பட்ட மரியாதை கிடைப்பது அமெரிக்காவில் மிகவும் அரிதானதாகும்.
மூன்று இந்நாள் முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஒரு சேர சென்று. ஒரு வெளிநாட்டு தலைவருக்கு நேரடி அஞ்சலி செலுத்துவதும் இதுவே முதல்முறையாகும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications