அப்ப, இன்னும் ஒபாமா "தம்"மை விடலையா...??
பான், ஜெர்மனி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிகரெட்டை விட்டு விட்டதாக கூறப்பட்டாலும் கூட சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு புகைப்படம், அவர் இன்னும் சிகரெட்டை விடவில்லையோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
ஜெர்மனியில் நடந்த ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருந்த ஒபாமா அங்கு ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில், இத்தாலி பிரதமர் மட்டியோ ரென்ஸியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது கையில் சிகரெட் பாக்கெட் போல ஒன்று வைத்திருந்தது சலசலப்பைக் கிளப்பியுள்ளது. ஒபாமா கையில் இருந்தது சிகரெட் பாக்கெட்தான் என்று கூறப்படுகிறது.

ஒரு கையில் சிகரெட் பாக்கெட்டை சுற்றிப் பிடித்துள்ள ஒபாமா அதிலிருந்து ஒன்றை எடுக்க முயல்வதும் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. ஜெர்மனியின் ஸ்லோஸ் எல்மா நகரில் நடந்த ஜி 7 உச்சி மாநாட்டின்போதுதான் இப்படி கையும் களவுமாக பிடிபட்டுள்ளார் ஒபாமா.
இரு தலைவர்களும் ஏதோ சீரியஸாக பேசிக் கொண்டுள்ளனர். அப்போது இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதை இத்தாலி பிரதமரின் செய்தித் தொடர்பாளர் பிலிப்போ சென்சி இன்ஸ்டாகிராமில் போட்டு விட, இப்போது வைரலாகி விட்டது. சென்சியும் புகை பிடிப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் அவரும் புகை பிடித்திருக்கலாம் என்றே சந்தேகிக்கப்படுகிறது.
இளம் வயதில் புகை பிடித்தவர் ஒபாமா. இருப்பினும் பொது இடத்தில் அவர் மிக மிக அரிதாகவே புகை பிடிப்பார். இடையில் விட்டு விட்டதாக கூற தகவல்கள் வெளியாகின. நிக்கோட்டின் கம் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சிகரெட் பாக்கெட்டும் கையுமாக அவர் சிக்கியுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒபாமாவின் மனைவி மிஷல் கூறுகையில், எனது கணவர் சிகரெட்டை விட்டு ஒரு வருடமாகி விட்டது என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
2009ம் ஆண்டு அளித்த அவரது பேட்டியின்போது நான் சிகரெட்டை விட முடியாமல் தடுமாறுகிறேன். தினசரி சிகரெட் புகைக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால் செயின் ஸ்மோக்கர் அல்ல என்று கூறியிருந்தார் ஒபாமா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications