கென்னடி அறிவித்த விடுதலை விருது... பில் க்ளிண்டனுக்கு வழங்கினார் ஒபாமா!
வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க குடியரசுத் தலைவர் வழங்கும் ‘விடுதலை விருது' (Medal of Freedom) முன்னாள் அதிபர் பில் க்ளிண்டனுக்கு வழங்கப்பட்டது.
இது இந்தியாவில் குடியரசுத் தினத்தன்று வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதுக்கு நிகரானது. வெவ்வேறு துறைகளில் சாதனை புரிந்த அமெரிக்கர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுவது.

கென்னடி அறிவித்த விருது
சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நவம்பர் 22 ம் தேதி பகல் 1 மணி அளவில் டல்லாஸ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியால் அறிவிக்கப்பட்டது இந்த விருது.
ஆனால் அவர் கையால் ஒருவருக்கு கூட விருது வழங்க முடியவில்லை. முதல் விருது வழங்கும் விழாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகத்தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

50வது நினைவு நாளில்
அவர் இறந்த ஐம்பதாவது நினைவு நாள் நேற்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்பட்டது. தொலைக்காட்சிகள் பழைய காட்சிகளை ஒளிபரப்பின. அவரது கொலைவழக்கை விவாதித்து எழுதப்பட்ட இரண்டாயிரத்திற்கும் மேலான புத்தகங்கள் பல தூசி தட்டி மறு விற்பனைக்கு வந்துள்ளன. பல்வேறு அரசு சார்ந்த, தனியார் விசாரணைகள் நடந்திருந்தாலும், இன்று வரையிலும் அவரது படுகொலை மீதான் மர்மம் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

விடுதலை விருது விழா
கென்னடி அறிவித்த விருது விழா, அவரது மறைவு தினத்தையொட்டி, அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கும் தருணம் தனக்கு மகிழ்ச்சியான ஒன்று என ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

பில் க்ளிண்டனுக்கு
இந்த ஆண்டு முன்னாள் அதிபர் பில் க்ளிண்டனுக்கு அரசியலில் அரும் பெரும் சாதனை புரிந்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது. முன்னதாக கென்னடி நினைவிடத்தில் அதிபர் ஒபாமா, மிஷல் ஒபாமா, பில் க்ளிண்டன், ஹிலரி க்ளிண்டன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். கென்னடியின் மனைவி ஜாக்குலின் கென்னடியும் அவரது குடும்பத்தாரும் கலந்து கொண்டார்கள்.

ஹிலரிக்கு ஆதரவு
அடுத்த அதிபர் தேர்தலில் ஹிலரி க்ளிண்டன் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பில் க்ளிண்டனுக்கு விருது வழங்கியது, அவருடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற நிகழ்வுகள் மூலம் ஹிலரிக்கு ஒபாமாவின் தீவிர ஆதரவு இருப்பதாக கருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications