உலகின் செல்வாக்குமிக்க 16 டீனேஜர்கள் பட்டியலில் மாலியா ஒபாமா, மலாலா
நியூயார்க்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மூத்த மகள் மாலியா, தாலிபான்களால் சுடப்பட்டு உயிர் பிழைத்த மலாலா ஆகியோர் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க டீனேஜர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
டைம்ஸ் பத்திரிக்கை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 16 டீனேஜர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இளைஞர்களை இம்பிரஸ் செய்த இளம் பாடகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில்நுப்ட நிபுணர்களாக இருக்கும் டீனேஜர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் சிலரை பார்ப்போம்.

மாலியா ஒபாமா
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மூத்த மகள் மாலியா(15) உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க டீனேஜர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். மாலியாவும் அவரது தங்கை ஷாஷாவும் தந்தையின் நிகழ்ச்சிகளில் பெரியவர்கள் போன்று நடந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலாலா
பெண் கல்விக்காக குரல் கொடுத்து தாலிபான்களால் சுடப்பட்டு மறுஜென்மம் எடுத்த பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாயின்(16) பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மலாலாவின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்டின் பீபர்
கனடாவைச் சேர்ந்த பாப் பாடகரான 19 வயது ஜஸ்டீன் பீபரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 58 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அவர் தனது 15வது வயதில் சோலோ பாடலை வெளியிட்டார்.

லிடியா கோ
தென் கொரியாவில் பிறந்த நியூசிலாந்து கோல்ப் வீராங்கனை லிடியா கோ(16) பல எல்பிஜிஏ(லேடீஸ் புரபஷனல் கோல்ப் அசோசியேஷன்) பட்டங்களை வென்றுள்ளார். புரபஷனல் கோல்ப் டூரில் பட்டம் வென்ற இளம் வீராங்கனை கோ. மேலும் எல்பிஜிஏ போட்டியில் பட்டம் வென்ற இளம் வீராங்கனையும் கோ தான். அவரின் பெயரும் உலகின் மிகவும் செல்வாக்குமிக்க டீனேஜர்களின் பட்டியலில் உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications