வெள்ளை மாளிகையை காலி செய்த பிறகு ஒபாமா இங்குதான் தங்கப் போகிறாராம்!
வெள்ளை மாளிகையை காலி செய்த பிறகு அதிபர் ஒபாமா தங்குவதற்கான புதிய வீடு தயாராகி விட்டது.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றப் பின் ஒபாமா தங்க இருக்கும் வீடு அவரது வருகைக்காக காத்திருக்கிறது. வெள்ளை மாளிகையில் உள்ள வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டின் உள் அலங்காரங்கள் கண்களை கவரும் வகையில் உள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக பதவியேற்பவர் பதவிக்காலம் முடியும் வரை வெள்ளை மாளிகையில் தங்க வைக்கப்படுவர். இதையடுத்து வெள்ளை மாளிகையில் வசிக்கும் முன்னாள் அதிபருக்கு அந்நாட்டு அரசு புதிய வீடு வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இவர் வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ளார். இதையடுத்து புதிய அதிபருக்கு வெள்ளை மாளிகை வழங்கப்பட வேண்டும்.
இதனால் தற்போதைய அதிபர் ஒபாமாவுக்கு அந்நாட்டு அரசு வாஷிங்டன் அருகே உள்ள கலோரமா பகுதியில் வெள்ளை மாளிகையில் இருந்து 3 கிலோதொலைவில் ஒபாமாவுக்கு புதிய வீட்டை ஒதுக்கியுள்ளது.

பதவிக்காலம் நிறைவு...
தற்போதைய அதிபரான ஒபாமாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி அமெரிக்க அரசு அவருக்கு புதிய வீட்டை ஒதுக்கியுள்ளது. ட்ரம்ப் புதிய அதிபராக பதவியேற்ற பிறகு ஒபாமா இந்த புதிய வீட்டில் குடியேறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வீடு...
வாஷிங்டன் நகருக்கு அருகே கலோரமா பகுதியில் வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த புதிய வீடு உள்ளது.

9 படுக்கையறைகள்...
8200 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட வீட்டில் 9 படுக்கையறைகள் உள்ளன.

8 குளியலறைகள்...
8 குளியலறைகள், மொட்டைமாடி, 10 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

உயர் ரக சமயலறை....
ஒரு உயர்ரக சமயலறையும் விருந்தினர்களுக்கான ஒர் அறையும் நவீன வசதிகளுடன் இடம் பெற்றுள்ளது.

விஸ்தாரமான ஹால்...
டிவி உள்ளிட்ட வசதிகளுடனும் கண்ணைக் கவரும் உள் அலங்காரத்துடனும் விஸ்தாரமான ஹால் அமைக்கப்பட்டுள்ளது...

புல்வெளி தோட்டம்...
வீட்டைச் சுற்றிலும் பசுமையான புல்வெளியுடன் பசும் மரங்களும் செடிகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. வெள்ளை மாளிகையில் உள்ள வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் தான் அதிபர் ஒபாமா தனது பதவிக்காலம் முடிந்ததும் குடும்பத்துடன் குடியேற போகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசியான நகரின் நடுவே உள்ள போதிலும் இந்த வீடு பேரமைதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்ன மகள் படிப்பு முடியும் வரை
அவரது இளையமகளின் பள்ளி படிப்பு 2018ஆம் ஆண்டு வரை இருப்பதால் அதுவரை தலைநகரில் வசிக்க ஒபாமா விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒபாமா வெள்ளை மாளிகையை விட்டு சென்றாலும் அவருக்கு வழங்கப்படும் ரகசிய பாதுகாப்பு தொடரும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
PHOTOS: MRIS
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications