ஹிலாரி அமெரிக்காவின் சிறந்த அதிபராக விளக்குவார்... ஒபாமா நம்பிக்கை
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராகும் வாய்ப்பு ஹிலாரி கிளிண்டனுக்கு உள்ளதாக தற்போதைய அதிபர் ஒபாமா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஒருவர் இரண்டுமுறைக்கு மேல் தொடர்ந்து அதிபர் பதவி வகிக்க முடியாது. தேர்தலிலும் நிற்க முடியாது. தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, 2வது முறையாக அதிபராக பதவி வகித்து வருகிறார். விரைவில் அவரது பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது.

எனவே, அமெரிக்காவில் அடுத்தாண்டு அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. தேர்தலை சந்திக்க குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் தயாராகி வருகின்றனர். அதிபர் தேர்தலில் போட்டியிட இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அமெரிக்காவை பொருத்தவரை முதலில் கட்சிக்குள் தேர்தல் நடத்தப் படும். அதில் வெற்றி பெறுபவரே அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். ஜனநாயக கட்சியில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரிக்கு அதிக செல்வாக்கு உள்ளது. எனவே, அவர் அக்கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப் படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்குப் பின் ஹிலாரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது. தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும் ஹிலாரி பெறுவார்.
.
இந்நிலையில், ஹிலாரி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் சிறந்த அதிபராக விளங்குவார் என ஒபாமா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரிக்கு எனது முழு ஆதரவு உண்டு. சிறந்த நிர்வாகியாக திறம்பட செயல்பட்டுள்ளார். அவர் என்னுடைய நண்பர். ஹிலாரி சிறந்த அதிபராக விளங்குவார்' என்றார்.
67 வயதான ஹிலாரி, செனடராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டுள்ளார். கடந்த முறை அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் குறைந்த ஓட்டில் தோல்வியை ஹிலாரி தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications