அணுசக்தி விவகாரம்.. ஈரானுடன் ஒப்பந்தம் இல்லைன்னா யுத்தம்தான் நடத்தனும்..: ஒபாமா 'பொளேர்' பதில்
வாஷிங்டன்: அணுசக்தி கட்டுப்பாடு விவகாரத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது அல்லது யுத்தம் மூலம் தீர்வு ஏற்படுத்துவது என்ற இரு வாய்ப்புகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை; அதனால்தான் பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்கா அதிபர் ஒபாமா திட்டவட்டமான பதிலளித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுடன் ஈரான் வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி கட்டுப்பாடு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும் அந்நாட்டு ஆதரவு அமெரிக்கா எம்.பி.க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஒப்பந்தம் உருவான நாள் 'வரலாற்றில் கருப்பு நாள்' என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. மேலும் அணுஆயுதம் தாங்கிய ஒரு பயங்கரவாத தேசமாக ஈரான் உருவெடுத்துவிட்டது என்றும் இஸ்ரேல் கடுமையாக விமர்சித்திருந்தது.

இந்த விமர்சனங்களுக்கு அமெரிக்கா அதிபர் ஒபாமா அளித்துள்ள பதில்:
- ஈரான் அணுசக்தி கட்டுப்பாடு விவகாரத்துக்கு ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்; அல்லது யுத்தத்தின் மூலமாக தீர்வு எட்டப்பட வேண்டும். நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு செய்துள்ளோம்.
- ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்டோர் இந்த இரண்டுக்கும் மாற்றாக என்ன தீர்வை கையில் வைத்திருக்கிறார்கள்?
- அணுசக்தி ஒப்பந்தத்தை விமர்சிப்பவர்கள், ஈரானின் அணுசக்தியை முற்றாக அமைதிவழியிலோ அல்லது வேறு ஏதேனும் ஒருவழியிலோ "அழித்துவிட" வேண்டும் என்கிறார்கள்.. அது நடைமுறை சாத்தியம் இல்லாதது.
- இந்த ஒப்பந்தத்தால் மத்திய கிழக்கில் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்றும் கூறுகிறார்கள்.. எங்களைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் என்பது ஈரான் நாடானது அணு ஆயுதத்தைத் தயாரிப்பதை தடுத்து நிறுத்தும். அதைத் தவிர வேறு எதுவுமே நடக்காது.
- அணு ஆயுதத்தை ஈரான் வைத்திருப்பது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்கிறார்கள்.. எங்களைப் பொறுத்தவரையில் ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருந்தாலும் வைத்திருக்காவிட்டாலும் அமெரிக்காவின் நலன்களுக்கு அந்நாடு எதிரானதாக இருந்தால் அதை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்.
- தீவிரவாதிகளுக்கு ஈரான் மறைமுகமாக உதவி வருவதற்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஒருங்கிணைந்து நெருக்கடி கொடுப்பதற்கு இந்த அணுசக்தி ஒப்பந்தம் உதவி உள்ளது.
- 4 அமெரிக்க நாட்டவர் ஈரான் சிறையில் இருக்கும் போது அந்நாடுடன் எப்படி அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டீர்கள் என கேள்வி கேட்கிறார்கள்.. தற்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திட்டிருப்பதன் மூலம் அமெரிக்க நாட்டவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.
இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications