ஓ.. மை கடவுளே.. ஒபாமாவும், மிஷலும் டூர் போன செலவு ரூ. 11,157 கோடியாம்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிஷல் ஒபாமாவும் சேர்ந்து அமெரிக்காவின் பல இடங்கள் மற்றும் உலக நாடுகளுக்கு போய் வந்த வகையில் மட்டும் ரூ. 11,157 கோடி செலவிட்டுள்ளனராம்.
தங்குமிடம், சாப்பாடு, வாடகை, பாதுகாப்பு செலவு உள்ளிட்ட அத்தனை செலவுகளும் இதில் அடக்கமாம்.
அமெரிக்காவில் நிதிப் பிரச்சினை தலை விரித்தாடிய நிலையில், இன்னும் நிலைமை சீராகாத நிலையில், சிக்கனத்தை அதிபரே வலியுறுத்தும் நிலையில் அவர் மட்டும் இப்படிச் செலவு செய்யலாமா என்ற கோஷம் அங்கே எழுந்துள்ளதாம்.

பால் பெடார்ட் தரும் கணக்கு
வாஷிஹ்டன் எக்ஸாமினர் என்ற பத்திரிக்கையில் பால் பெடார்ட் என்பவர்தான் இந்த செலவுக் கணக்கைப் போட்டு ஒபாமாவை டென்ஷனாக்கியுள்ளார்.

22 ஊர்களுக்கு நெடும் பயணம்
ஒபாமாவும், மிஷலும், அதிபர் பதவிக்கு ஒபாமா வந்த பின்னர் மொத்தம் 22 இடங்களுக்குத் தனிப்பட்ட முறையிலும், அதிகாரப்பூர்வமாகவும் போயுள்ளனராம்.

ஹவாயில் தொடங்கி ஆப்பிரிக்கா வரை
ஹவாய், மார்த்தா வின்யார்ட், ஸ்பெயின், கொலராடோ, புளோரிடா, ஆப்பிரிககா என பல இடங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

வாடகை முதல் சாப்பாட்டுச் செலவு வரை
ஹோட்டல் வாடகை, சாப்பாட்டுச் செலவு, வாகனச் செலவு, பாதுகாப்பு,, விமான பயணத்துக்கான செலவு என பல வகையான செலவுகள் இதில் இடம் பிடித்துள்ளன.

தனித் தனியான காதலர் தினக் கொண்டாட்டம்
இந்த முறை ஒபாமாவும், மிஷலும் தனித் தனியாக காதலர் தினத்தை இரு இடங்களில் கொண்டாடினர். எனவே இந்தக் காதலர் தினச் செலவு இரட்டை செலவாகி விட்டது.

ஊருக்கு மட்டும்தானா் உபதேசம்
ஒபாமாவின் இந்த செலவுகள் குறித்து அமெரிக்காவின் ஜூடிசியல் வாட்ச் என்ற அரசு சார்ந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. ஒபாமா, மிஷலின் பயண விவரங்கள், செலவுகள் குறித்து ஆ்வணங்களை அது கோரியுள்ளது. ஆனால் அதில் பாதிதான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
ஊருக்கு மட்டும்தானா உபதேசம்.. ஒபாமா என்ற குரல்கள் தற்போது அமெரிக்காவில் கிளம்பியுள்ளன.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications