போர் விமானங்கள் மீது தாக்குதல்: தெற்கு சூடானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஜூபா: தெற்கு சூடானில் அமெரிக்க போர் விமானங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீரினுக்கு எதிராக நடக்கும் உள்நாட்டுப் போர் மிக தீவிரமடைந்துள்ளது. ராணுவத்துக்கும் புரட்சி படைக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது.
தெற்கு சூடானில் உள்ள ஜொங்கோலி மாநிலத்தின் அபோக்கோ நகரில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தின் மீது சுமார் 2 ஆயிரம் நுவர் இன தீவிரவாதிகள் கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தினர். நுகர் இன தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவை சேர்ந்த 2 அமைதிப்படையினர் உட்பட மொத்தம் 22 பேர் இந்த தாக்குதலில் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
போர் உச்சத்தை எட்டியுள்ளதால், தெற்கு சூடானில் வாழும் அமெரிக்கர்களை திரும்ப அழைத்து வரருவதற்காக அமெரிக்கா 45 ராணுவ வீரர்களுடன் 3 போர் விமானங்களை அனுப்பியது.
புரட்சிப் படையினரின் பிடியில் உள்ள போர் நகரத்தில் அமெரிக்க விமானங்கள் தரையிறங்க முயன்ற போது, புரட்சிப் படையினர் ஆவேச தாக்குதல் நடத்தினர். இதில் 4 அமெரிக்க வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'ஆயுத பலத்தை பயன்படுத்தி தெற்கு சூடானின் ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்களின் இத்தகைய செயல்பாடுகள் அமெரிக்காவும், சர்வதேச சமுதாயமும் அளித்து வரும் நீண்டகால ஆதரவை இழக்கும் நிலைக்கு தெற்கு சூடானை தள்ளிவிடும்' என அவர் எச்சரித்துள்ளார்.
'ஜுபா மற்றும் போர் பகுதிகளில் வசிக்கும் எங்கள் நாட்டினரை திரும்ப அழைத்துக் கொள்ளும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு தெற்கு சூடான் தலைவர்களுக்கு உண்டு 'என்றும் ஒபாமா கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications