'அழகுக்குட்டிச் செல்லங்களுடன்'... டிவிட்டரில் டிரண்டான ஒபாமா!
வாஷிங்டன்: குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது நம்ம ஊர் அரசியல்வாதிகளின் ஸ்டைல் என்றால் அமெரிக்காவிலும் கிட்டத்தட்ட அதே பாணியிலான அரசியல் இருக்கத்தான் செய்கிறது. அங்கு குழந்தைகளுடன் விளையாடுவது, தூக்கிக் கொஞ்சுவது, முத்தம் இடுவது போன்றவற்றில் அந்த நாட்டு அரசியல்வாதிகள் ஈடுபடுகிறார்கள்.
அந்த வகையில் அதிபர் பராக் ஒபாமா மற்ற அரசியல்வாதிகளை விட ஒரு படி மேலே போய் விட்டார் என்று கூட கூறலாம். குழந்தைகளும், ஒபாமாவும் பிரிக்க முடியாத அம்சமாகும். 2 முறை அதிபராக இருந்த காலகட்டத்தில் அவர் கொஞ்சிய, விளையாடி, தூக்கிய குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம்.
ஒபாமா, குழந்தைகளுடன் இருப்பதை வைத்து அமெரிக்க தொழிலதிபர் மிக்கேல் ஸ்கோலிங்க் என்பவர் #ObamaAndKids என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரண்ட் ஆக்கியுள்ளார்.
|
குழந்தைகளுடன் ஒபாமா...
இதில் ஒபாமா விதம் விதமான குழந்தைகளுடன் இருக்கும் படங்கள் இடம் பெற்றுள்ளனர். பல இனத்து குழந்தகைளுடன் கலர் கலரான போஸில் ஒபாமா இதில் காட்சி தருகிறார்.
|
விதவிதமான போஸ்...
இளம் கருப்பர் இனக் குழந்தைகள், வெள்ளையர் இனக் குழந்தைகள், ஆசியக் குழந்தைகள் என விதம் விதமான குழந்தகைளுடன் விதம் விதமான போஸில், காட்சி தருகிறார் ஒபாமா.
|
வைரல்...
இந்த புகைப்படத் தொகுப்பு தற்போது இணையதளத்தில் வைரல் ஆகியுள்ளது. வெள்ளை மாளிகையில் தனது அறையில் தரையில் படுத்துக் கிடக்கும் குழந்தையுடன் இவரும் கிட்டத்தட்ட படுக்காத குறையாக போய்க் கொஞ்சுவது உள்பட பல படங்கள் கொள்ளை அழகாக உள்ளன.
|
மகள்களுடன்...
ஒபாமா அதிபராக முதல் முறையாகப் பதவியேற்றபோது அவரது மகள்கள் மலியா (தற்போது 17), சாஷா (14) ஆகியோர் சிறுமிகளாக இருந்தனர். இப்போது அந்த சிறுவயதைத் தாண்டி விட்டனர். அவர்களுடன் ஒபாமா இருக்கும் படங்களும் பார்க்க அழகாக இருக்கின்றன.

இளைஞர்கள்...
பொதுவாகவே ஒபாமாவுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் மட்டுமல்லாமல் இளைஞர்களையும் அவர் அதிகம் உற்சாகப்படுத்துவார், ஊக்குவிக்கும் வகையில் பேசுவார்.

அழகு குட்டிச் செல்லங்கள்...
அமெரிக்க அதிபர்களிலேயே அதிக அளவில் குழ்ந்தைகளுடன் நெருங்கிப் பழகியது, முத்தமிட்டது ஒபாமாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications