4 குழந்தைகளைக் கட்டி வைத்து சித்திரவதை செய்த தாய் - பலாத்காரம் செய்த பாய் பிரண்ட்

அமெரிக்காவின் ஓகியோ நகரில் நான்கு குழந்தைகள் தனது தாய், பாட்டி மற்றும் தாயின் ஆண் நண்பரால் மிகுந்த கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
ஓகியோவை சேர்ந்த பெண்மணி பாபி சூயு பேக்.இ வரது தாயார் எட்வினா லூயிஸ்...இவர்கள் இருவரும் பாபியின் ஆண் நண்பரான ஜூயன் கரோலஸ் சான்செஸ் என்பவருடன் கூட்டு சேர்ந்து அக்குழந்தைகளை கட்டிப்போட்டு,செயினால் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.மேலும் சான்செஸ், பாபியின் 11 மற்றும் 9வயதான பெண்குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளான்.
அக்குழந்தைகளை தொடர்ச்சியாக செயின் மற்றும் கரண்டியால் அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.மேலும் கட்டிலில் அவர்களை கட்டிப் போட்டு வைத்திருந்துள்ளனர்.
ஜுயன் சான்செஸ் அந்த இரண்டு பெண்குழந்தைகளையும் பாபி மற்றும் எட்வினாவிற்கு தெரிந்தே பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதில் அவர்களுக்கு உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. சான்செஸ்ஸின் குழந்தையாக கருதப்படும் இரண்டு வயது பெண் குழந்தையின் உடலில் மட்டும் காயங்கள் காணப்படவில்லை.
இந்தக் குழந்தைகளை வெளியே விடாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர். மேலும் ஆன்லைன் மூலம் போதனை நடந்துள்ளது. இந்த நிலையில், சமயோசிதமாக செயல்பட்ட அக்குழந்தைகள்,தங்களது இணைய ஆசிரியரிடம் இவற்றை கூறி அமெரிக்க குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பின்னரே இந்த சித்திரவதை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
வாழ்க்கையிலேயே முதல் முறையாக இந்த மாதிரியான குற்றத்தை பார்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
"இச்சம்பவம் மிக கொடுமையான நிகழ்வாகும்.அவர்கள் குழந்தைகளை பல வாரங்களுக்கு நிர்வாணமாக கட்டிலில் கட்டி வைத்துள்ளனர்.மேலும் எப்போதாவதுதான் உணவு வழங்கியுள்ளனர்.அவர்களுடைய இணைய வகுப்பின்போது மட்டுமே சங்கிலிகள் அவிழ்க்கப்பட்டுள்ளன.ஆனால்,அக்குழந்தைகள் மிக மிக தைரியசாலிகள்.கடவுள்தான் அவர்களுக்கு அந்த தைரியத்தை அளித்துள்ளார்"என பத்திரிக்கையிடம் கூறியுள்ளார் டேவிட் ஹால் என்ற காவல்துறை அதிகாரி .
குழந்தைகள் அனைவரும் கடுமையான மன உளைச்சளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சான்செஸ்,பாபி மற்றும் எட்வினா ஆகிய மூவரும் பாலியல் வன்முறை,குழந்தைகள் வன்கொடுமை ஆகிய புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்குடும்பம் ஆகஸ்டு மாதம்தான் ஓகியோவிற்கு இடம் பெயர்ந்துள்ளது.அதற்கு முன்பிருந்தே இக்கொடுமை நடந்து வந்ததாக அக்குழந்தைகள் தெரிவித்துள்ளனர். இக்கொடியவர்களின் வழக்கு வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications