சிக்னல் கிடைத்த இடத்தில் எண்ணெய் படலம்: மாயமான விமானத்தில் இருந்து வந்ததா?
பெர்த்: மலேசிய விமானத்தை தேடும் கடல் பகுதியில் எரிபொருள் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து 4 முறைக்கு மேல் சிக்னல்கள் கிடைத்தது. ஆனால் அதை வைத்து கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க முடியாமல் போனது. இதற்கிடையே கருப்புப் பெட்டியின் பேட்டரியின் ஆயுள் முடிந்து அதில் இருந்து வரும் சிக்னல்களும் அடங்கிவிட்டன.

இந்நிலையில் விமானத்தை தேடும் பகுதியில் எரிபொருள் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த எரிபொருள் கடலுக்கு அடியில் 5 ஆயிரத்து 500 மீட்டர் ஆழத்தில் இருந்து வந்துள்ளது.
இது குறித்து தேடல் பணிக்கு தலைமை வகிக்கும் அதிகாரி ஆங்கஸ் ஹூஸ்டன் கூறுகையில்,
விரைவில் நீர்மூழ்கி கப்பலை வைத்து விமானத்தை தேடவிருக்கிறோம். கடந்த 6 நாட்களில் ஒரு சிக்னல் கூட கிடைக்கவில்லை. நீருக்கு அடியில் சென்று தேடும் நேரம் வந்துவிட்டது. இந்நிலையில் தேடல் பகுதியில் எண்ணெய் மிதந்தது. சுமார் இரண்டு லிட்டர் அளவுக்கு மிதந்த எரிபொருளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிக்னல் கிடைத்த இடத்தில் தான் எண்ணெய் மிதந்துள்ளது. இந்த எண்ணெய் தேடல் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களில் இருந்து வந்தது இல்லை என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications