Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரான் 2800 கிமீ.. வெனிசுலா 15215 கிமீ.. கப்பல் செலவை ட்ரம்ப் கொடுப்பாரா.. மக்கள் தலையில் விழுமா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இன்று சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு கேள்வியை பரவலாக பார்க்க முடிந்தது. அதன்படி ஈரானிலிருந்து இந்தியா தொலைவு 2800 கிலோ மீட்டர். வெனிசுலாவில் இருந்து இந்தியா தொலைவு 15215 கிலோ மீட்டர். இப்படி அஞ்சு மடங்கு தூரத்துலருந்து பெட்ரோல் கொள்முதல் செய்தால். அது கப்பலில் வரும் போக்குவரத்து செலவை எல்லாம் ட்ரம்ப் கொடுப்பாரா.. இல்லை நம்ம தலையிலா? என்று கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்விக்கான பதிலலையும், உண்மையான நிலவரத்தையும் இந்த பதிவில் பார்ப்போம்.

பொதுவாக தூரம் அதிகரிக்கும்போது போக்குவரத்துச் செலவு என்பதும் நிச்சயமாக அதிகரிக்கும். இது ஒரு சாதாரண கணக்குத்தான். ஆனால், சர்வதேச கச்சா எண்ணெய் வணிகம் என்பது வெறும் தூரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது கிடையாது. பலர் வெனிசுலாவின் தூரத்தை சுட்டிக்காட்டி, தூரமான நாட்டிலிருந்து எண்ணெய் வாங்கும்போது ஏற்படும் கூடுதல் செலவு யார் தலையில் விழும் என்று கேட்டு வருகிறார்கள். இதோ அதற்கான காரணங்கள் பற்றி பார்ப்போம்.

Oil Trade Does Long-Distance Import from Venezuela Burden Indians or is there a Secret Discount

கப்பல் செலவை யார் கொடுப்பார்?

வெளிப்படையாகச் சொன்னால், வெனிசுலாவில் வாங்குவதற்கான போக்குவரத்து செலவை அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுக்க மாட்டார்; அது இந்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் தலையில்தான் விழும். இறுதியில் இது பெட்ரோல், டீசல் விலையாக மக்கள் தலையில்தான் விடியும். ஆனால், இதில் சில 'பிசினஸ்' தந்திரங்கள் இருக்கின்றன.

விலை தள்ளுபடி

ஈரான் பக்கத்தில் இருந்தாலும், அமெரிக்கா அதன் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. எனவே, வெனிசுலா போன்ற நாடுகள் தங்களின் எண்ணெயை விற்க வேண்டும் என்பதற்காக, கச்சா எண்ணெயின் விலையிலேயே பெரும் தள்ளுபடி வழங்கும் வாய்ப்பு உள்ளது. கப்பல் செலவு அதிகமானாலும், எண்ணெயின் விலை குறைவாக இருந்தால் இந்தியாவுக்கு அது லாபமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பபடுகிறது.

எண்ணெய் தரம்

எல்லா கச்சா எண்ணெயும் ஒன்று கிடையாது. வெனிசுலாவின் எண்ணெய் "கனரக எண்ணெய்" . இதைச் சுத்திகரிக்க இந்தியாவிலுள்ள ஜாம்நகர் (ரிலையன்ஸ்) போன்ற சுத்திகரிப்பு நிலையங்கள் உலகிலேயே மிகச்சிறந்தவையாக பார்க்கப்படுகிறது. இந்தத் தரமான எண்ணெயை அவர்கள் குறைந்த விலைக்குத் தரும்போது, தூரம் ஒரு பொருட்டாகத் தெரியாது என்கிறார்கள்.ஆனால் சுத்திகரிப்பு செலவு அதிகமாகும் என்றே பரவலாக கூறுகிறார்கள்.

ஏன் இவ்வளவு தூரம் போய் வாங்க வேண்டும்?

இந்தியா ஏன் ஈரானை விட்டுவிட்டு வெனிசுலா அல்லது அமெரிக்காவிடம் செல்கிறது என்பதற்குப் பின்னால் சர்வதேச அரசியலும் இருக்கிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இருக்கும்போது, ஈரானிடம் எண்ணெய் வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்போம் என்று மிரட்டுவார். இந்த மிரட்டல் காரணமாகவே இந்தியா ஈரானை விட்டுவிட்டு, தூரமாக இருந்தாலும் அமெரிக்காவுக்கோ அல்லது அதன் நட்பு நாடுகளுக்கோ (வெனிசுலா போன்றவை) மாற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஆற்றல் பாதுகாப்பு

ஒரே நாட்டை (ஈரான் அல்லது ரஷ்யா) மட்டும் நம்பியிருந்தால், அங்கு போர் வந்தால் இந்தியாவுக்கு எண்ணெய் கிடைக்காமல் போய்விடும். எனவே, உலகம் முழுவதும் பல நாடுகளிடம் பிரித்து வாங்குவது இந்தியாவின் கொள்கையாக இன்று வரை இருந்து வருகிறது.

ஐந்து மடங்கு தூரம் - ஐந்து மடங்கு செலவா

கப்பல் போக்குவரத்து என்பது பேருந்து பயணம் போன்றது அல்ல. ஒரு மிகப்பெரிய 'சூப்பர் டேங்கர்' கப்பலில் பல கோடி லிட்டர் எண்ணெய் வரும்போது, ஒரு லிட்டருக்கான போக்குவரத்துச் செலவு என்பது மிகக் குறைவாகவே உயரும். 2800 கி.மீ க்கும் 15000 கி.மீ க்கும் உள்ள போக்குவரத்துச் செலவு வித்தியாசம், ஒரு லிட்டருக்குச் சில ரூபாய்களாக மட்டுமே இருக்கும்.

நுகர்வோர் தலையில் விழும்

இதில் தெளிவாக சொல்வது என்றால், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நாட்டு நலனுக்காக ஈரானைத் தடுக்கிறார். இந்தியா தனது 'பாதுகாப்புக்காக' அதிக தூரம் பயணிக்கிறது. இந்த இழுபறியில் ஏற்படும் கூடுதல் செலவை ஈடுகட்ட, வெனிசுலா போன்ற நாடுகளிடம் இந்தியா "பெரிய தள்ளுபடி" கேட்கும். அந்தத் தள்ளுபடி கிடைக்காவிட்டால், நிச்சயமாக அந்தப் பாரம் இந்திய நுகர்வோர் மீதுதான் சுமத்தப்படும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

புதிய கொள்கை முடிவு

அதேநேரம் வெனிசுலா ஓரளவு இந்தியாவிற்கு லாபகரமானதாகவே இருக்கும் என்கிறார்கள். ஏனெனில் அங்குள்ள அரசியல் மாறியதே காரணம். புதிய அரசின் முடிவின் படி, இனி வெனிசுலாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும்பான்மையான பங்கை தங்கள் கைவசம் வைத்து கொள்ள முடியும். மேலும் தாங்கள் உற்பத்தி செய்யும் எண்ணெயை நேரடியாகவே ஏற்றுமதி செய்யவும், விற்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு சாதகமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும், இந்தியா போன்ற பிறநாடுகளுக்கும் பயனுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய நிறுவனங்கள் உற்சாகம்

அதேபோல் வெனிசுலா அரசு, முன்பு செய்தது போல இனி தனியார் சொத்துகளைத் தன்னிச்சையாக தேசியமயமாக்காது என்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இது அந்த நாட்டு எண்ணெய் கிணறுகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறது.

நேரடியாக முதலீடு செய்யலாம்

அதனால் இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் அங்கு நேரடியாக முதலீடு செய்து, எண்ணெய் உற்பத்தி கிணறுகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் இயக்க முடியும். இப்போது ரஷ்யா அல்லது ஈரானை பொறுத்தவரை நாம் அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெயை விலை கொடுத்து வாங்கும் ஒரு வாடிக்கையாளர் மட்டுமே இருக்கிறோம். ஆனால், வெனிசுலாவைப் பொறுத்தவரை நமது நிறுவனங்கள், கச்சா எண்ணெய் உற்பத்தியை தாங்களே செய்து இந்தியாவிற்குக் கொண்டு வரமுடியும்.

40 சதவீத பங்கு உள்ளது

எனவே, ரஷியாவிற்கு இந்தியா வெறும் 'வாடிக்கையாளர்'. ஆனால் வெனிசுலாவில் இந்தியா ஒரு 'உற்பத்தியாளர்' ஆக மாற முடியும். வெனிசுலா மூலம் இந்தியாவிற்கு மற்றொரு லாபமும் இருக்கிறது. அதாவது வெனிசுலாவின் ஓரினோகோ எண்ணெய் மண்டலத்தில் உள்ள 'சான் கிரிஸ்டோபால்' என்ற எண்ணெய் கிணறு திட்டத்தில், இந்தியாவின் ஒ.என்.ஜி.சி விதேஷ் நிறுவனம் 40 சதவீதம் பங்குகளை வைத்திருக்கிறது. மீதமுள்ள 60 சதவீத பங்குகள் வெனிசுலாவின் அரசு நிறுவனமான பெட்ரோலியோஸ் டி வசம் இருக்கிறது.

600 மில்லியன் டாலர் பணம்

கடந்த 2014 முதல் 2019 வரை வெனிசுலாவில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக, அந்தத் திட்டத்தில் கிடைத்த லாபம் 600 மில்லியன் டாலர் பணத்தை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி இந்தியாவுக்குப் பணமாக வழங்க வெனிசுலாவால் முடியாமல் போனது. ஆனால் வெனிசுலாவின் புதிய சட்டத் திருத்தத்தின் படியும் அதற்கும் ஒரு தீர்வு கிடைத்து உள்ளது. அதாவது அந்த பணத்திற்கு பதிலாக ஒ.என்.ஜி.சி. நிறுவனமே கச்சா எண்ணெயைத் தானே உற்பத்தி செய்து நேரடியாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியும். வெனிசுலா இந்தியாவிற்கு லாபகரமானதாகவே இருக்கும் என்பதே கருத்தாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+