ரூமுக்குள் விட்டு கோவை சரளா போல கிளிண்டனை கும்மி எடுத்து விட்டாராாமே ஹில்லாரி!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் இருக்கும் ஹில்லாரி கிளிண்டன் தனது கணவர் பில் கிளிண்டனை அடித்து உதைப்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஹில்லாரி கிளிண்டன். அவர் தனது பிரச்சாரத்தை துவங்கி மக்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இந்நிலையில் அரசியல் கொள்கை வகுப்பாளரான ரோஜர் ஸ்டோன் என்பவர் தி கிளிண்டன்ஸ் வார் ஆன் விமன் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ஸ்டோன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஹில்லாரி
ஹில்லாரி கிளிண்டன் உண்மையில் கோபக்காரர். அவர் உலக மக்களுக்கு முன்பு தான் அமைதியான, சாந்தமான பெண் என்பது போன்று வேஷமிடுகிறார்.

கோபம்
ஹில்லாரிக்கு கோபம் வந்தால் அவரது கணவரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான பில் கிளிண்டன் மற்றும் ஊழியர்களை திட்டுவார். ஏன், பல சமயம் பில் கிளிண்டனை தாக்கியுள்ளார்.

பில் கிளிண்டன்
ஹில்லாரி பில் கிளிண்டனுன் சண்டை போடுவார். பல சமயங்களில் கோபத்தில் பில் மீது பொருட்களை வீசுவது, அவரை நகத்தால் கீறுவது, அடிப்பது என்று கொடுமைப்படுத்தியுள்ளார். கணவரை கன்னத்தில் அறைந்துள்ளார். ஹில்லாரி தாக்கியதில் பில் கிளிண்டனுக்கு ரத்தகாயம் எல்லாம் ஏற்பட்டுள்ளது என்றார் ஸ்டோன்.

அடி, உதை
1993ம் ஆண்டு ஹில்லாரி மரணப் படுக்கையில் இருந்த தனது தந்தையை பார்க்க சென்றபோது பில் கிளிண்டன் பாடகி பார்பரா ஸ்ட்ரீசாண்டை வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார். இது பற்றி தெரிந்த ஹில்லாரி உடனே கிளம்பி வந்து தனது கணவரை தாக்கியதில் அவருக்கு ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது என வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊடக செயலாளர் டீ டீ மேயர்ஸ் தெரிவித்துள்ளார்.

மோனிகா
1999ம் ஆண்டு மோனிகா லிவென்ஸ்கி விவகாரம் வெளியே வந்தபோது ஹில்லாரியும், பில் கிளிண்டன் கத்தி கத்தி சண்டை போட்டதை வெள்ளை மாளிகை ஊழியர்கள் கேட்டுள்ளனர். அப்போது ஹில்லாரி பில் கிளிண்டனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அவர் அறைந்த வேகத்தில் அவரின் கைவிரல் பில் கிளிண்டனின் முகத்தில் பதிந்திருக்கிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications