ஒரு கையுடன் விமானத்தை செலுத்திய விமானி.. தடுமாற்றத்துடன் தரையிறங்கிய விமானம்
பெல்பாஸ்ட்: ஒரு செயற்கைக் கையைப் பொருத்திய இங்கிலாந்தைச் சேர்ந்த விமானி ஒருவர், விமானத்தைத் தரையிறக்கியபோது அவரது செயற்கைக் கை தவறி விழுந்து விட்டதால் விமானத்தைத் தரையிறக்கும்போது பெரும் தடுமாற்றத்தைச் சந்தித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக விபத்து ஏதும் இல்லாமல் விமானம் தரையிறங்கியுள்ளது.
பிர்மிங்காமிலிருந்துடேஷ் 8 வகை சிறிய விமானம் ஒன்று பெல்பாஸ்ட் நகருக்கு வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 47 பயணிகள் இருந்தனர். விமானம் பெல்பாஸட் நகர விமான நிலையத்தை அடைந்தபோது தரையிறங்கும் சமயத்தில் 46 வயதான அந்த விமானியின் இடது செயற்கைக் கை திடீரென கழன்று விழுந்து விட்டது.

கையின் கிளாம்ப் கழன்றதால் கை விழுந்து விட்டது. இதனால் விமானி பதட்டமடைந்து விட்டார். விமானமும் தரையிறங்குவதில் தடுமாற்றத்தைச் சந்தித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான விபரீதமும் இல்லாமல் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
முதலில் இணை விமானியின் உதவியைக் கோர அவர் நினைத்துள்ளார். ஆனால் சமாளித்துக் கொள்ளக் கூடிய அளவில் அவகாசம் இருந்ததால் துணிச்சலுடன் தானே விமானத்தை பத்திரமாக இறக்கி விட்டார். வலது கரத்தால் சமாளித்து விமானத்தை பத்திரமாக அவர் தரையிறக்கி விட்டார்.
சற்று தடுமாற்றம் ஆனதால் விமானம் சற்று ஆடியபடி தரையைத் தொட்டு ஓடி நின்றது. இருப்பினும் விமானத்தில் இருந்த யாருக்கும் காயம் ஏதும் இல்லை. மேலும் விமானமும் கூட சேதம் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications