குழந்தைக்காக... ஒரே மனைவியை 6 முறை டைவர்ஸ் செய்து சாதனை புரிந்த தொழிலதிபர்
புகாரஸ்ட்: ருமேனியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் ஒரே பெண்ணை ஆறு முறை மணந்து, ஆறு முறை விவாகரத்து செய்தும் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ருமேனியா நாட்டில் பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழிலதிபர் சிலிவு பிரிகோனா (வயது 50). இவர் தனது 39 வயது மனைவி அடரினா பாக்முட்டேனு என்பவரை ஆறு முறை திருமணம் செய்து ஆறு முறை விவாகரத்தும் செய்துள்ளார்.
இவர் ஒரே பெண்ணை ஆறு முறை திருமணம் மற்றும் விவாகரத்து செய்தது உலக சாதனையாக கருதபடுகிறது.
வாட்ச் பரிசு...
மனைவியை மிகவும் நேசிப்பவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் பிரிகோனா, தன் மனைவிக்கு இதுவரை ஆயிரக்கணக்கில் வாட்ச் வாங்கி பரிசளித்துள்ளாராம்.
குழந்தை வேண்டும்....
ஆனால், ஓவ்வொரு முறை விவாகரத்து செய்யும்போது அவர் சொல்லும் ஒரே காரணம், ‘தனது மனைவி தன்னுடன் தாம்பத்ய உறவு கொள்ள மறுக்கிறார், தனக்கென ஒரு குழந்தை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை' என்பது தான்.
மாயமான பர்ஸ்...
மேலும், தன்னை நிராகரிக்கும் பெண் இந்த பூமியிலேயே இன்னும் பிறக்கவில்லை எனக் கூறும் பிரிகோனா, தான் இதுவரை லட்சக்கணக்காண ரூபாய் மதிப்பில் சுமார் 50 மணிபர்ஸ்சுக்களை வாங்கி தனது மனைவிக்கு பரிசளித்ததாகவும், ஆனால், அவை இப்போது எங்கே உள்ளது என்றே தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்..
மனைவிக்கு மரியாதை....
சிறுவயதில் போலியோ நோய் தாக்குதலால் தனது ஒரு காலை இழந்தாலும், தனது மனைவிக்கு ராஜமரியாதை கொடுத்து வந்ததாக கூறும் பிரிகோனா, தனது மனைவிக்கு தான் வாங்கி கொடுத்துள்ள பரிசுப்பொருட்களை வைத்தே தனது மனைவியின் மேல் தான் வைத்துள்ள அன்பை புரிந்துகொள்ளலாம் என பெருமையாகக் கூறுகிறார்.
மனைவி மேல் காதல்...
தன்னை பல பெண்கள் விரும்பி திருமணம் செய்ய வருகிறார்கள் என்றும் ஆனால் தனக்கு தன் மனைவி அடரினா மேல் மட்டுமே காதல் வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நண்பர்கள் கிண்டல்...
தற்போது பிரிந்து வாழ்கிறது இத்தம்பதி. ஆனால் சில நாட்களில் மீண்டும் தனது மனைவியை ஏழாவது முறையாக திருமணம் செய்வார் என அவரது உறவினர்களும் நண்பர்களும் கிண்டலாகக் கூறுகின்றனர்.
இதுக்காகவே உங்களுக்கு ஒரு வொண்டர் சொல்லலாம்.....
பரவாயில்லை.. ஊருக்கு ஒரு மனைவி என்று வாழ்பவர்களுக்கு மத்தியில் இந்த மனிதர் ஒரே மனைவியை திரும்பத் திரும்ப மணந்து வருவது நல்ல விஷயம்தானே.. பிரிந்தாலும் திரும்பத் திரும்ப மனைவியிடமேதானே அவர் மனம் போகிறது. பாராட்ட வேண்டியதுதான்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications