Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் சிறுவன் சிகிச்சை: ஒன் இந்தியா செய்தியால் மேலும் 5000 டாலர் நன்கொடை!

Subscribe to Oneindia Tamil

டல்லாஸ்(யு.எஸ்) திண்டுக்கல் சிறுவனின் Beta Thalassemia நோய் மருத்துவச் சிகிச்சைக்காக நிதி திரட்டும் அமெரிக்கத் தமிழர்களின் முயற்சி குறித்து கடந்த சனிக்கிழமை ஒன் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இந்தச் செய்தியைப் பார்த்து ஒன் இந்தியா வாசகர்கள் பெருமளவில் நன்கொடை அளித்தவாறு உள்ளனர். செய்தி வெளியான கடந்த மூன்று தினங்களில் 5 ஆயிரம் டாலர்கள் நன்கொடை கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறியுள்ள ஒருங்கிணைப்பாளர் லேகா, ஒன் இந்தியா நிர்வாகத்திற்கும் வாசகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Oneindia readers donates $5000 for Dindigul child treatment

இன்னும் 19 ஆயிரம் டாலர்கள் தேவை

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்தச் செய்தியைப் பார்த்து உதவ முன்வந்துள்ள உலகத் தமிழர்களின் அன்பும் ஆதரவும் மிகவும் நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. பண உதவி செய்வதுடன் கௌதம் நலமடைவதற்காக பிரார்த்தனைகளும் செய்து வருகிறார்கள். தொலைபேசியில் ஆறுதல் கூறுகிறார்கள், முயற்சிக்கு ஊக்கமளிக்கிறார்கள்.

இதுவரையிலும் 16 ஆயிரம் டாலர்கள் நன்கொடை கிடைக்கப் பெற்றுள்ளோம். சிறுவன் கௌதமின் Bone Marrow Transfusion சிகிச்சைக்கான மொத்த 20 லட்ச ரூபாய்க்கு, இன்னும் 19 ஆயிரம் டாலர்கள் தேவைப்படுகிறது. அதையும் தமிழ்ச் சொந்தங்கள் நன்கொடையாக பெற்றுத் தருவார்கள் என்பதுடன், சிகிச்சை முடிந்து நலமுடன் கௌதம் புது வாழ்க்கை தொடங்குவான் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது," என்றார்.

கண்ணீருடன் பெற்றோர் நன்றி

மகனின் சிகிச்சைக்காக, தனது தோழி எடுத்து வரும் முயற்சிகளையும், அதற்கு சக தமிழர்கள் கொடுத்து வரும் ஆதரவையும் தெரிந்து கொண்ட தாயார் ரேகா கிருஷ்ணன், தந்தை முரளி கிருஷ்ணன் ஆகியோர் கண்ணீருடன் நன்றி தெரிவித்துள்ளார்.

சிறுவன் கௌதமின் சிகிச்சைக்கு உதவ விருப்பம் உள்ளவர்கள் http://www.youcaring.com/medical-fundraiser/little-gowtham-needs-a-transplant-and-your-help-/138638 முகவரியில் நன்கொடை செலுத்தலாம்.

மேலும் தகவல் பெற [email protected] என்ற இமெயில் முகவரியிலோ அல்லது 214-550-0161 என்ற அமெரிக்கத் தொலைபேசி எண்ணிலோ ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

இந்தியாவில் 87545 49747 என்ற எண்ணிலோ அல்லது [email protected] என்ற இமெயில் முகவரியிலோ சிறுவனின் தந்தை முரளிகிருஷ்ணனிடம் தொடர்பு கொள்ளலாம்.

இந்திய வங்கியில் செலுத்த விரும்புகிறவர்கள்
Account Name:GOWTHAM KRISHNAN M
Account number 155701500133
Bank Name ICICI BANK LTD,
CITY NAME : KANGAYAM
IFSC CODE: ICIC0001557
SWIFT CODE: ICICNBBXXX
என்ற வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+