ஓ மை காஷ்... தூக்கு பாலத்தின் ஒரு பகுதியை தலைகீழாகக் கட்டிய சிலி கொத்தனார்கள்!

கிட்டத்தட்ட 3 கோடி டாலர் மதிப்பில் இந்த பாலம் கட்டப்பட்டு்ள்ளது. ஆனால் ஒரு பகுதியை சரியாக கட்டியவர்கள் , இன்னொரு பகுதியை தலைகீழாக கட்டி விட்டனர்.
வால்டிவியா என்ற பகுதியையும், தேஜா தீவையும் இணைக்கும் வகையில், காவ் காவ் ஆற்றின் மீது இந்தப் பாலம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது. எல்லாம் கூடி வந்த நேரத்தில் ஒரு பகுதி பாலம் தலைகீழாக மாற்றிக் கட்டி விட்டனர். இதனால் பெரும் குழப்பமாகி விட்டது.
பாலத்தை இந்த மாத இறுதியில் திறக்கத் திட்டமிட்டிருந்தனராம். ஆனால் அதற்கான வாய்ப்பில்லை என்கிறார்கள்.
பாலத்தை மாற்றிக் கட்டிய கோமாளித்தனத்தைப் பார்த்து ஊரே சிரித்துக் கொண்டிருக்கிறதாம். பேஸ்புக், டிவிட்டரில் இப்போது சிலி நாட்டவர் இதைத்தான் சொல்லிச் சொல்லி கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனராம்.
ஆனால் சிலி அதிபர் செபாஸ்டியன் பினெரா இதை சமாளித்து பேசி வருகிறார். இதை சரி செய்து விடலாம். சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனமே இதை சரி செய்து விடும். சரி செய்வதாக சொல்லியுள்ளனர் என்றார்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அஸ்வி என்ற நிறுவனம்தான் இந்த பாலத்தைக் கட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications