துருக்கியை விடுங்க..பாகிஸ்தானுடன் கைகோர்த்த இன்னொரு இஸ்லாமிய நாடு.. யாரு பாருங்க!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நம் நாடு துல்லியமாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் தான் துருக்கியை தொடர்ந்து அஜர்பைஜான் நம் நாட்டை கண்டித்து பாகிஸ்தானுடன் கரம் கோர்த்துள்ளது. இந்த அஜர்பைஜானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே என்ன தொடர்பு? பதற்றத்துக்கு நடுவேயும் பயங்கரவாத நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஏன்? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்'என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் துணை அமைப்பாகும்.

இதற்கு இன்று நம் நாடு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்குள் நம் நாடு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மொத்தம் 70 பேர் பலியாகினர்.
பொதுமக்கள் ஒருவர் கூட இறக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானோ அப்பாவிகளை இந்தியா கொன்றுவிட்டதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று கொக்கரித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இந்த மோதலில் பல நாடுகளும் நம் நாட்டின் பக்கம் தான் உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் இன்று நம் நாடு பதிலடி கொடுத்த நிலையில் இனி மோதல் என்பது வேண்டாம். இருநாடுகளும் பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என்று பல நாடுகளும் கூறி உள்ளன.
ஆனால் சில நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கி உள்ளன. முதலில் துருக்கி பாகிஸ்தான் பக்கம் சாய்ந்தது. இப்போது பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு அஜர்பைஜான் நம் நாட்டை கண்டித்துள்ளது. இதன்மூலம் அஜர்பைஜான், பாகிஸ்தானுடன் கரம் கோர்த்துள்ளது. இதுதொடர்பாக அஜர்பைஜான் நாட்டின் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛இஸ்லாமிக் சுதந்திர நாடான பாகிஸ்தான் மீதான ராணுவ தாக்குதல் என்பது பொதுமக்களை கொன்றுள்ளது. பலரும் காயமடைந்துள்ளனர். இதனை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த நேரத்தில் பாகிஸ்தான் மக்களுடன் நின்று இறந்த அப்பாவிக்களின் மக்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். அதேபோல் காயமடைந்தவர்கள் விரைந்து குணமாக வாழ்த்துகள் தெரிவிக்கிறோம். இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்கவும், தூதரக முறையிலான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவும் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.
அஜர்பைஜான் என்பது மேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பா எல்லையில் அமைந்துள்ள சிறிய நாடாகும். புரியும்படி கூற வேண்டும் என்றால் தற்போதைய சென்னை நகரை விட குறைந்த மக்கள்தொகை தான் இந்த நாட்டில் உள்ளனர். சென்னையில் இப்போது 1.20 கோடி மக்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அஜர்பைஜானின் மொத்த மக்கள்தொகையை வெறும். 1.02 கோடி தான். மேலும் அஜர்பைஜான் அது ஒரு இஸ்லாமியா நாடாகும். இங்கு வசிக்கும் மக்களில் 97 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாமியர்களாக உள்ளனர். அதில் ஷியா முஸ்லிம்கள் தான் அதிகம்.
இந்த நாட்டின் கிழக்கில் காஸ்பியன் கடல், வடக்கே ரஷ்யாவின் தாகெஸ்தான் குடியரசு, வடமேற்கில் ஜார்ஜியா, மேற்கில் ஆர்மீனியா மற்றும் துருக்கி, தெற்கே ஈரான் ஆகியவை எல்லையாக உள்ளன. அஜர்பைஜானின் தலைநகராக பாகு உள்ளது. இந்த நாட்டின் மக்கள்தொகை என்பது மிகவும் குறைவு. அஜர்பைஜானும், துருக்கியும் நெருங்கிய நட்பு நாடுகள். கடந்த 2020ம் ஆண்டில் நாகோர்னோ - கரரபாக் போரின்போது துருக்கி, அஜர்பைஜானுக்கு உதவி செய்தது. அதேபோல் பாகிஸ்தானும் அஜர்பைஜானின் பக்கம் தான் நின்றது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் - அஜர்பைஜான் இடையே ராணுவ ஒத்துழைப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவுடன் போர் ஏற்படும்போது அஜர்பைஜான் கண்ணை மூடிக்கொண்டு பாகிஸ்தானை தூக்கிப்பிடிக்கும். அந்த வகையில் இப்போதும் அஜர்பைஜான் இந்தியாவை கண்டித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications