60 வயதில் திருமணம் செய்யும் ஓபரா வின்ஃப்ரே: நண்பரை மணக்கிறார்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஓபரா வின்ஃப்ரே இன்னும் சில தினங்களில் புதுமணப்பெண்ணாக மாற உள்ளார்.

திருமணத்திற்குப் பின்னர் தம்பதி சமேதராக எல்லோரும் 60ம் கல்யாணம் முடிப்பார்கள். ஆனால் ஓபரா தன்னுடைய 60வது வயதில்தான் முதல் திருமணமே முடிக்கப் போகிறார்.

தன்னுடைய 20 ஆண்டுகால நண்பரான ஸ்டெட்மேன் கிரஹாம்தான் ஓபராவின் மணமகன்.

சேர்த்து வைத்த மண்டேலா

சேர்த்து வைத்த மண்டேலா

20 ஆண்டுகாலம் நட்பாக இருந்தாலும் சமீபத்தில் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற போதுதான் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டதாம்.

உருகும் கிரஹாம்

உருகும் கிரஹாம்

ஓபராவின் மீது அதீத காதலில் இருக்கும் கிரஹாம், நான் இறந்தாலும் ஓபராவின் அருகில்தான் என்னைப் புதைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

அமெரிக்க நாடான மிஸிஸிபியில் உள்ள கோசியூஸ்கோ என்னும் ஊரில் 1954-ம் வருடம் பிறந்தார் ஓபரா. பெற்றோருக்கிடையில் ஏற்பட்ட பிரிவால் கைக்குழந்தையாக இருந்தபோதே ஓபரா, கிராமத்தில் இருந்த பாட்டியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டார்.

வறுமை சூழலில் தன் தாயிடம் மீண்டும் வந்த ஓபரா தன்னுடைய ஒன்பது வயதில் உறவினர்களாலேயே பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டாள். இதனை பின்னாளில் அவரே ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

14 வயதில் தாய்மை

14 வயதில் தாய்மை

மேலும் மேலும் நிகழ்ந்த பலாத்கார அவலத்தினால் 14 வயதிலேயே ஒரு குழந்தைக்கு தாயாகி நின்றாள் சிறுமி ஓபரா. அந்தக் குழந்தையும் பிறந்த சில நாளிலேயே இறந்துவிட.. பதினான்கு வயதுக்கு சற்றும் பொருந்தாத மன அழுத்தம் அவரை ஆட்கொண்டது.

டிவி தொகுப்பாளினி

டிவி தொகுப்பாளினி

1973-ல் ஓபரா, ஒரு தொலைக்காட்சியில் சேர்ந்து, ‘பீப்பிள் ஆர் டாக்கிங்' என்ற நிகழ்ச்சியை நடத்தினார். மக்களின் அமோக ஆதரவால், 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்த நிகழ்ச்சியை நடத்தி அமெரிக்க மக்களின் மனதில் இடம் பெற்றார்.

சேவை மனப்பான்மை

சேவை மனப்பான்மை

தனக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்த குட்டிப் பெண்களுக்கு நடக்கக் கூடாது என்பதற்காக, 1991-ல் 'சிறுமிகளுக்கான பாலியல் கொடுமைகள் விழிப்புணர்வு அமைப்பை'த் தொடங்கி இன்று வரை அதற்காகப் பாடுபட்டு வருகிறார். 152 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

60 வயதில் திருமணம்

60 வயதில் திருமணம்

இதுநாள்வரை திருமணத்தைப் பற்றி நினைத்து பார்த்திராத ஓபரா தன்னுடைய 60 வது வயதில் நீண்டநாள் நண்பரை கைபிடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இதையறிந்த ஓபராவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+