நிதி சேகரிக்க சோபா, சேர், போட்டோவை விற்று ரூ. 3 கோடி திரட்டிய வின்பிரே...!
லாஸ் ஏஞ்சலெஸ்: டிவி உலக ராணியாக வலம் வருபவர் ஓபரா வின்பிரே. அதேசமயம், தாராள மனப்பான்மையும், ஈர உள்ளமும், சமூக சேவை மனப்பான்மையும் கொண்டவர் இவர்.
இந்த நிலையில் தன்னுடைய, ஓபரா வின்பிரே லீடர்ஷிப் அகாடமி பவுண்டேஷன் கல்லூரி நிதிக்காக, தான் நீண்ட காலமாக சேகரித்து வைத்திருந்த விலை மதிப்பற்ற டேபிள், சேர், புகைப்படங்கள், சோபா உள்ளிட்டவற்றை விற்று 3 கோடியே 70 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் நிதியை சேகரித்துள்ளார்.
நிதி சேகரிப்பதற்காக தனது பொருட்களையெல்லாம் விற்றுள்ள வின்பிரேவின் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ஏலம்
இந்தப் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்றுள்ளார் வின்பிரே. அவரது ரசிகர்கள் பெருமளவில் இவற்றை நல்ல விலைக்கு வாங்கிச் சென்றனர்.

கலிபோர்னியாவில் நடந்த ஏலம்
ஆன்லைன் மூலம் மட்டுமல்லாமல், கலிபோர்னியாவில் உள்ள சான்டா பார்பரா போலோ மற்றும் ராக்கெட் கிளப்பிலும் நேரடியாகவும் ஏலம் நடந்தது.

மரச்சாமான்கள்... புகைப்படங்கள்
மரச்சாமான்கள், புகைப்படங்கள், சோபாக்கள் என பலவகையான பொருட்களை ஏலத்தில் கொண்டு வந்தார் வின்பிரே.

60,000 டாலருக்கு ஏலம் போன ஆர்ம் சேர்
வின்பிரே பயன்படுத்தி வந்த 18வது நூற்றாண்டைச் சேர்ந்த 6 ஆர்ம் சேர்கள், 60,000 டாலருக்கு விலை போனது.

2 சோபாக்களுக்கு 8750 டாலர் விலை
அதேபோல அவரது வீட்டில் இருந்த இரண்டு வெல்வெட் சோபாக்கள் 8750 டாலருக்கு விலை போனது.

புகைப்படத்திற்கு 3000 டாலர்
ஒரு பெரிய சைஸ் வின்பிரே போட்டோ, 3000 டாலருக்கு ஒருவரால் வாங்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவுக்குப் போகிறது
வின்பிரேவின் கல்லூரி தென் ஆப்பிரிக்காவில் உள்ளது. அந்தக் கல்லூரிக்குத்தான் இந்த ரூ. 3.70 கோடி நிதியும் போய்ச் சேரவுள்ளது.

பலாத்காரத்துக்குள்ளானவர்
இளம் வயதில் தெருவில் திரியும் பொறுக்கிகளின் கையில் சிக்கி பாலியல் பலாத்காரக் கொடுமைக்குள்ளானவர் வின்பிரே என்பது நினைவிருக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications