ஊழியர்களுக்காக கூட்டு செக்ஸ் முதல் நிர்வாண பார்ட்டி வரை நடத்தும் கம்பெனிகள்
சான் பிரான்சிஸ்கோ: பேஸ்புக் மற்றும் ஆப்பிள் நிறுவனம் தங்கள் பெண் ஊழியர்களின் கருமுட்டைகளை பாதுகாக்க பணம் அளிக்கிறது. ஆனால் சிலிகான் வேலியில் உள்ள சில நிறுவனங்கள் கூட்டு செக்ஸ் முதல் நிர்வாண பார்ட்டி வரை நடத்துகின்றன.
பேஸ்புக் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்த ஏதுவாக பல சலுகைகளை அளித்து வருகிறது. அதில் பெண் ஊழியர்களின் கருமுட்டை, ஆண்களின் விந்துவை பாதுகாக்க பணம் கொடுப்பது, குழந்தை பெற தேவையான சிகிச்சைக்கு உதவுவதும் அடக்கம்.
ஆனால் அமெரிக்காவின் சிலிகான் வேலியில் இருக்கும் சில நிறுவனங்கள் அளிக்கும் சலுகைகளை பார்த்தால் பேஸ்புக், ஆப்பிள் சலுகை எல்லாம் ஒன்றும் இல்லை.

லாஸ் வேகாஸ்
அமெரிக்காவில் உள்ள ப்ரீபார்ன் மற்றும் பீட்டர்ஸ் என்ற சட்ட நிறுவனம் ஆண்டுதோறும் லக்கேஜ் பார்ட்டி நடத்துகிறது. அதாவது பார்ட்டி நாள் அன்று ஊழியர்கள் தங்களின் லக்கேஜை அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டும். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 4 பேர் லிமோசின் காரில் ஏர்போர்ட் அழைத்துச் செல்லப்பட்டு லாஸ் வேகாஸில் வார இறுதி நாட்களை கழிக்க அலுவலகமே செலவு செய்யும்.

ஹெலிகாப்டர்
செக்யூரிட்டி கேமரா நிறுவனமான டிராப்கேம் தனது ஊழியர்கள் நண்பர்களுடன் சேர்ந்து இலவசமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வவுச்சர் அளிக்கிறது. ஹெலிகாப்டரை டிராப்கேம் நிறுவன சிஇஓ கிரெக் டஃப்ஃபி ஓட்டுகிறார்.

ஆர்கி
ஜெர்மனியைச் சேர்ந்த இன்சுரன்ஸ் நிறுவனமான முன்சி ரே தனது ஊழியர்களை மகிழ்விக்க கூட்டு செக்ஸ் எனப்படும் ஆர்கி நடத்த முடிவு செய்தது.

நிர்வாண பார்ட்டி
டிசைன் மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனமான ஒன்பெஸ்ட்வேயின் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை அன்று ஆடையின்றி நிர்வாணாக பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

செல்லங்கள்
ஏர்பிஎன்பி நிறுவனம் தனது ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்லப்பிராணிகளை கொண்டு வர, அதனுடன் விளையாட, வார வாரம் யோகா வகுப்புக்கு செல்ல, ஆர்கானிக் உணவு உண்ண சலுகை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications