காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் 'பிளேட் ரன்னர்' ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறை!
பிரிட்டோியா, தென் ஆப்பிரிக்கா: காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்ற வழக்கில் தென் ஆப்பிரிக்க பாராலிம்பிக் வீரரும், 'பிளேட் ரன்னர்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு காதலர் தினத்தின்போது நடந்த பயங்கர சம்பவத்தில் ரீவாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் பிஸ்டோரியஸ். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இது.

இந்த வழக்கு பிரிட்டோரியாவில் நீதிபதி தோகோஸைல் மசிபா முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது நீதிபதி மசிபா தனது தீர்ப்பை அளித்துள்ளார். அதில், குற்றத்துக்குரிய கொலை என்பதால் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக கூறியுள்ளார் நீதிபதி.
மேலும் துப்பாக்கியை பயன்படுத்தியது தொடர்பான இன்னொரு குற்றச்சாட்டில் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்தத் தண்டனையை தற்போதைக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம், திட்டமிட்டு இந்தக் கொலையை பிஸ்டோரியஸ் செய்யவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த வாரம் பிஸ்டோரியஸின் வக்கீல்கள் நீதிபதியிடம், பிஸ்டோரியஸுக்கு சிறை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் 3 வருட சீர்திருத்த தண்டனை விதிக்கலாம் என்று வலியுறுத்தினர். அதாவது வீட்டுக் காவல் போல. இருப்பினும் நீதிபதி அதை நிராகரித்து விட்டார்.
பிஸ்டோரியஸுக்கு இரு கால்களும் கிடையாது. 'மெட்டல்' கால்களுடன் அவர் வலம் வருகிறார். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அவர் மற்ற சாதாரண வீரர்களுடன் இணைந்து போட்டியிட்டு புதிய சாதனை படைத்தவர் ஆவார்
கடந்த 2013ம் ஆண்டு காதலர் தினத்தின்போது பிஸ்டோரியஸுக்கும், அவரது காதலி ரீவாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது டாய்லெட்டுக்குள் ரீவாவைத் தள்ளி துப்பாக்கியால் நான்கு முறை சுட்டார் பிஸ்டோரியஸ். இதில் ரீவா ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
தனது தண்டனையை எதிர்த்து அப்பீல்செய்ய பிஸ்டோரியஸுக்கு வாய்ப்பு இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications