மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றாரா ஆஸ்கர் பிஸ்டோரியஸ்?
ஜோஹன்னஸ்பர்க்: காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தென் ஆப்பிரிக்க மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ், மணிக்கட்டு அறுபட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
அவர் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அதை ஆஸ்கர் தரப்பு மறுத்துள்ளது. கட்டிலிலிருந்து விழுந்ததில் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டு விட்டதாக ஆஸ்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பிஸ்டோரியஸ் தற்கொலைக்குத்தான் முயன்றதாகவும், அவரது அறையிலிருந்து பிளேடு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஆனால் சிறை நிர்வாகம் தரப்பில் கூறுகையில் இது சாதாரண காயம்தான். சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் ஆஸ்கர் சிறைக்குத் திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது காதலி ரீவா ஸ்டீன்கெம்ப் என்பவரை கடந்த 2013ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றார் பிஸ்டோரியஸ். இந்த வழக்கில் அவருக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிஸ்டோரியஸ் என்பது நினைவிருக்கலாம்.
29 வயதான பிஸ்டோரியஸ், 2012 லண்டன் பாராலிம்பிக் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார் பிஸ்டோரியஸ். இப்படி பாராலிம்பிக் போட்டியிலும், ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்ற ஒரே தடகள வீரர் இவர் ஒருவர்தான். லண்டன் பாராலிம்பிக் போட்டியில் இவர் 6 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications