மோடியின் வெற்றியால் பிரிட்டனில் ஆதிக்கம் செலுத்தும் நம் கலாச்சாரம்.. ஆனந்த் மஹிந்த்ரா பெருமித ட்விட்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: வர்த்தகத்தில் ஜாம்பவானாக திகழும் மஹிந்த்ரா நிறுவன தலைவரான ஆனந்த் மஹிந்த்ரா மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்க உள்ளதையொட்டி, லண்டனில் நடந்த கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்த வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

அவர் ஷேர் செய்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ஆனந்த் மஹிந்த்ரா ஷேர் செய்துள்ள வீடியோவில், பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்றதை லண்டன் நகர வீதிகளில் கர்பா நடனமாடி மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

Our culture is dominated in Britain .. Anand Mahindra is proud of Twit

லண்டன் நகர வீதி ஒன்றில் உள்ள சுரங்கப்பாதைக்கு வெளியே கூடிய நூற்றுக்கணக்கான இந்திய மக்கள், மோடி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதை டான்ஸ் ஆடி கொண்டாடி மகிழ்ந்துள்ள வீடியோவை தான் ஆனந்த் மஹிந்த்ரா ஷேர் செய்துள்ளார்.

அந்த வீடியோவில் பிரபலமான குஜராத்தி பாடல் ஒன்றுக்கு மக்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்கின்றனர். மோடி பிரதமராவதற்கு முன்னர் 2001 முதல் 2014 வரை குஜராத் மாநில முதல்வராக இருந்தார் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் குஜராத் முதல்வர் பதவியை துறந்தது நமக்கு நினைவிருக்கும்.

மேற்கண்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஆனந்த் மஹிந்த்ரா, எனது வாட்ஸ் அப்பில் இந்த வீடியோ வந்திருந்தது. இதில் மோடியின் வெற்றியை லண்டன் நகர வீதிகளில் கர்பா நடனமாடி மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நடனத்தை தாம் மிகவும் விரும்பி பார்த்ததாக கூறியுள்ளார்.

நம் நாட்டை ஆதிக்கம் செலுத்திய பிரிட்டனில் நம்முடைய கலாச்சாரம், தற்போது ஆதிக்கம் செலுத்துவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் எனது கர்பா நடன அசைவுகளை புதுப்பிக்க சரியான நேரமாக தற்போது கருதுகிறேன் எனவே நல்ல கர்பா நடன அசைவுகள் கொண்ட யூ டியூப் வீடியோக்கள் இருந்தால் அதை எனக்கு பகிருங்கள் என உற்சாகம் பொங்க கூறியுள்ளார்

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து ஆனந்த் மஸிந்த்ரா மோடியின் வெற்றியை கொண்டாடும் வகையில் நிறைய உற்சாகமான வீடியோக்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார் ட்விட்டரில் அவரை ஏறத்தாழ 7 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்

பிரதமர் மோடியையும் அவரது செயல்பாடுகளையும் பாராட்டக்கூடிய தொழிலதிபர்களில் ஒருவராக ஆனந்த் மஹிந்த்ரா தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+