பால்கனி இடிந்து விழுந்து 6 மாணவர்கள் பலி – அமெரிக்காவில் விபரீதம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்து 6 இளைஞர்கள் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவின் பெர்க்லே பகுதியில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள விடுதி கட்டிடத்தின் நான்காவது மாடியில் மாணவர் ஒருவரின் பிறந்தநாளை அவரது நண்பர்கள் கொண்டாடினர். பிறந்த நாள் விழாவில் 14க்கும் மேற்பட்ட மாணவர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும் பால்கனியில் உற்சாகமாக கூச்சல் போட்டுகொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென பால்கனி இடிந்து விழுந்தது.
இதில் ஆறு மாணவர்கள் பலியானதாகவும், 7 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் உயர்அதிகார் ஒருவர் பால்கனி இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் மற்ற இருவர் மருத்துவமனையில் மரணமடைந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் இறந்தவர்களில் 5 பேர் அயர்லாந்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் அமெரிக்காவை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications