For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் இருந்து 22 லட்சம் மக்கள் இடம் பெயர்வு – ஐநா தகவல்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியாவில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் பல்வேறு இயற்கை பேரிடர்கள் காரணமாக 2013 ஆம் ஆண்டில் மட்டும் 22 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.

ஐ.நா சபை, குளோபல் எஸ்டிமேட்ஸ் 2014 "பேரிடர்களால் மக்கள் இடம்பெயர்வு" என்ற பெயரில் அறி்க்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2013 ஆம் ஆண்டில், சர்வதேச அளவில், இயற்கை பேரிடர்கள் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், அதிக மக்கள் இடம்பெயர்ந்துள்ள நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் சீனாவும், 2 ஆம் இடத்தில் பிலிப்பைன்ஸ்சும், 3 ஆம் இடத்தில் இந்தியாவும் உள்ளது.

இயற்கைப் பேரிடர்கள் காரணமாக, 2013 ஆம் ஆண்டில், இந்தியாவில் 22 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
About 2.14 million people were displaced in India last year due to natural disasters, according to a United Nations-backed report which said the country was third after the Philippines and China to record the highest levels of displacement in 2013.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X