மீளாத் துயரில் இலங்கை.. 20 உயிர்களைப் பலி கொண்ட நிலச்சரிவு! கனமழையால் கதறும் மக்கள்.. 14 பேர் மாயம்!
கொழும்பு: இலங்கையில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் நிலச்சரிவால் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 14 பேர் காணாமல் போன நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர்ச்சியான கனமழை காரணமாக, அந்நாட்டில் பெரும் அழிவை உருவாக்கியுள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு மக்கள் வாழ்க்கையை முற்றிலும் பாதித்துள்ளது.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி, மழையால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை வெள்ளம்
இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள பதுல்லா மாவட்டம் நிலச்சரிவால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இந்த மலை மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவுகளில் மட்டும் 18 மரணங்கள் பதிவாகியுள்ளன. மண் பெரிய அளவில் சரிந்து வீடுகள் புதையுண்ட சம்பவங்களில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பதுல்லாவைத் தொடர்ந்து கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கனமழை பாதிப்பு
இங்கு ஏற்பட்ட விபத்துகளில் பலர் உயிரிழந்ததோடு, 14 பேரைக் கண்டுபிடிக்க தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த வாரத்தில் இருந்து நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை இலங்கையில் பல்வேறு பகுதிகளை முற்றிலும் முடக்கியுள்ளது. வெள்ளப் பெருக்கு காரணமாக வீடுகள், விவசாய நிலங்கள், சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ளநீர் வேகமாக வீதிகளில் பரவியதால் பலர் தற்காலிக தங்குமிடங்களைத் தேடி ஓட வேண்டிய சூழல் ஏற்பட்டது. பல குடியிருப்புகள் கனமழையில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ரயில் சேவை முடக்கம்
இந்நிலையில், கனமழை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மலைப்பகுதிகளில் உள்ள ரயில் பாதைகள் பல இடங்களில் சேதமாகியுள்ளன. பாறைகள், பெரிய மரங்கள் தண்டவாளங்களில் விழுந்ததால் ரயில் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளும் பல பகுதிகளில் வெள்ளநீரால் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து சீர்குலைந்துள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மொத்தம் 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
வெள்ள சேதம்
இதனால் 1,100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மூன்று வீடுகள் முற்றிலும் இடிந்து நாசமாகியுள்ளன. 381 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த கடுமையான இயற்கை பேரிடர் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளாது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் சமீப காலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த கவலைக்குரியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். இலங்கை மக்களுடன் எப்போதும் நாங்கள் நிற்கிறோம்" என்று கூறியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications