மொத்தம் 35,000 பேர்.. ‛வந்தே மாதரம்’ பாடலால் சிலிர்த்துப்போன அமீரகம்! மோடியால் அதிர்ந்த ஸ்டேடியம்
அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்சில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் இணைந்து ‛வந்தே மாதரம்' பாடல் பாடி சிலிர்க்க வைத்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றுள்ளார். கத்தாரில் பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் 27 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக சுவாமி நராயண் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) திறந்து வைக்க உள்ளார்.

இதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு நேற்று சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆரத் தழுவி வரவேற்றார்.
அதன்பிறகு பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அங்கு தனக்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பை பார்த்து பிரதமர் மோடி பூரித்துப்போனார். மேலும் சொந்த நாட்டில் இருப்பது போல் உணர்வதாக பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார்.
இதையடுத்து நேற்று இரவில் அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில், 'அஹ்லான் மோடி' என்ற பெயரில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் முன்பு அங்கு கூடியிருந்த 35,000க்கும் அதிகமான இந்தியர்கள் ஒன்று கூடி வந்தே மாதரம் பாடலை பாடினர்.
#WATCH | UAE: A large number of people present at Zayed Sports Stadium in Abu Dhabi for PM Narendra Modi's 'Ahlan Modi' event.
— ANI (@ANI) February 13, 2024
PM will address the Indian diaspora here, shortly. pic.twitter.com/USHsrZnjx8
ஒரே நேரத்தில் 35,000க்கும் அதிகமானவர்கள் ஒன்றிணைந்து இந்த பாடலை பாடியதால் அந்த மைதானதே அதிர்ந்தது. இந்தியா மீதான தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் பாடப்பட்ட இந்த பாடல் அனைவரையும் சிலிர்க்க வைத்தது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications