ருஷ்டியின் மாஜி மனைவி பத்மலட்சுமியுடன் ஹாலிவுட் கெரேவுக்கு காதலா...??
லாஸ் ஏஞ்செலஸ்: ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவுக்கும், நடிகை மற்றும் டிவி ஹோஸ்ட் பத்மலட்சுமிக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டுள்ளதாக அமெரிக்க இணையதளம் ஒன்று செய்தி பரப்பியுள்ளது.
பத்மலட்சுமி ஏற்கனவே சல்மான் ருஷ்டியை மணந்து பின்னர் விவாகரத்தானவர். பின்னர் டெல் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிறுவனரான மைக்கேல் டெல்லின் சகோதரர் ஆடம் டெல்லுடன் குடும்பம் நடத்தி ஒரு பெண் குழந்தைக்குத் தாயானவர்.
தற்போது இங்கிலாந்தின் ஒரு டிவியில் சமையல் நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்து வருகிறார் பத்மா. இந்த கெரே செய்தி குறித்து அவர் விளக்கம் ஏதும் அளிக்காமல் உள்ளார்.

இந்திய அமெரிக்க அழகி
இந்தியாவைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீமாகக் கொண்டவர் பத்மலட்சுமி.

ருஷ்டியின் மனைவி
இவர் இந்திய வம்சாவளி ஆங்கில எழுத்தாளரான சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி ஆவார்.

3 வருட கால ருஷ்டி வாழ்க்கை
ருஷ்டியை 2004ம் ஆண்டு மணந்து 2007ம் ஆண்டு விவாகரத்து செய்தவர் பத்மா.

43 வயது சகலகலாவல்லி
43 வயதாகும் பத்மா சகலகலாவல்லி ஆவார். நடிகையாக, மாடல் அழகியாக, டிவி ஹோஸ்ட் என்று பல அவதாரம் படைத்தவர். உடலை சிக்கென்று வைத்துக் கொண்டிருப்பதன் மூலம் பலரையும் கவர்ந்தவர்.

கெரேவுடன் காதலா
இந்த நிலையில்தான் ரிச்சர்ட் கெரேவுக்கும், பத்மாவுக்கும் இடையே ரகசியமாக காதல் தீ பற்றிக் கொண்டுள்ளதாக கொளுத்தி விட்டுள்ளது அமெரிக்க பொழுதுபோக்கு இணையதளம் ஒன்று.

செப்டம்பரிலேயே சிங்கிள் ஆன கெரே
கெரே தனது மனைவியை விட்டு கடந்த செப்டம்பர் மாதம்தான் பிரிந்தார் என்று ஏற்கனவே செய்திகள் உள்ளன நிலையில் அவர் தற்போது பத்மா பக்கம் சாய்ந்துள்ளதாக புதிய கிசுகிசு கிளம்பியுள்ளது.

என்னதான் நடக்குதோ...
இந்த செய்தி குறித்து பத்மா மட்டுமல்ல கெரே தரப்பிலும் கூட பதில் ஏதும் இல்லை.
பூனைக் குட்டி வெளியே வராமலா போய்ரும்..
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications