மலேசியாவில் கொடூரம்... 91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த இங்கிலாந்து ஆசிரியர்
கோலாலம்பூர்: மலேசியாவில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து, அது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்ட இங்கிலாந்து ஆசிரியர் மீதான வழக்கு விசாரணையின் தீர்ப்பு நாளை வெளியாகவிருக்கிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ரிச்சர் ஹக்லே (30), என்பவர் கோலாலம்பூரில் உள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்து, அதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் 2006 - 2014 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் 91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும், இதுதொடர்பாக சுமார் 20,000 ஆயிரம் ஆபாச புகைப்படங்களை தனது கணிணியில் சேகரித்து வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மலேசியாவில் இருந்து இங்கிலாந்துக்கு திரும்பிய இவரை கேட்விக் விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் ஹக்லே மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னர் தீவிர விசாரணை நடத்தியதில் 71 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். எஞ்சிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள ஹக்லே மறுத்துள்ளார்.
இவர் மீதான வழக்கு இங்கிலாந்தில் உள்ள மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது, இந்நிலையில் நேற்று விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி பிரைன் ஓ நெய்ல் கூறும் போது
குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதால் அவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். இவர் செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டாலும், அது போதிய தண்டனையாக அமையாது என கூறியுள்ளார், தற்போது இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications