பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுகணை சோதனை- அமெரிக்கா வார்னிங்!
வாஷிங்டன்: பாகிஸ்தான் தொடர்ந்தும் அணு ஆயுத ஏவுகணை தயாரித்து சோதனை நடத்துவதில் மும்முரம் காட்டி வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அணு ஆயுதங்களை சுமந்தபடி 350 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமையுள்ள ஏவுகணையை பாகிஸ்தான் சில நாட்களுக்கு முன்னர் வெற்றிகரமாக பரிசோதித்தது.
ராட் என பெயரிடப்பட்ட இதுபோன்ற சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உலகின் சில நாடுகளிடம் மட்டுமே உள்ளன என்றும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. கடல் மற்றும் நிலப்பகுதியில் இருந்து அணு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை சுமந்தபடி புறப்பட்டு செல்லும் இவ்வகை நவீன ஏவுகணைகள் குறிப்பிட்ட இலக்கை வெகு துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆற்றல் படைத்தவையாகும்.

இந்த ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்கா பாதுகாப்புத் துறை அதிகாரி வின்சென்ட் ஸ்டீவர்ட் கூறுகையில், பாகிஸ்தான் தொடர்ந்தும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகளை பரிசோதிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. பாகிஸ்தானின் இந்தப் போக்கு ஆபத்தானது.
மேலும், கைபர் மாகாணம் மற்றும் பழங்குடி இனத்தவர் பிரதேசங்களில் பாகிஸ்தான் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளின் எஞ்சிய பகுதிகளையும் அந்நாட்டு ராணுவம் இந்த ஆண்டுக்குள் அழித்து நிர்மூலமாக்கிவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.
பாகிஸ்தான் ராணுவம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிற போதும் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளால் அதன் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் நீடித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் குறைக்கப்படும் நிலையில் தலிபான்கள், அல்கொய்தா இயக்க தீவிரவாதிகள் தலையெடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆப்கான் ராணுவத்துக்கு அவர்கள் கடும் நெருக்கடி கொடுக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications