மனைவி, குழந்தைகளுடன் வசிக்கும் இந்தியரை நாடு கடத்த தடை: பாக். ஹைகோர்ட் உத்தரவு
லாகூர்: மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாகிஸ்தானில் வசித்து வரும் இந்தியரை நாடு கடத்தும் உத்தரவுக்கு லாகூர் ஹைகோர்ட் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள லாகூர் ஹைகோர்ட்டில் ராபியா ஜஹாங்கீர் என்ற பெண் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அவர் தெரிவித்திருப்பதாவது :-
‘நான் இந்தியாவை சேர்ந்த ஜபார் ரியாஸ் என்பவரை 2005-ம் ஆண்டில் திருமணம் செய்து எனக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர் இந்தியாவில் நடத்திய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அங்கு அவருக்கு நிதி உதவி அளிக்க யாரும் இல்லை. இதனால் அவர் என்னுடன் பாகிஸ்தானில் தங்கியிருக்கிறார்.
டிசம்பர் 14-ந்தேதிக்குள் அவர் நாட்டைவிட்டு வெளியேற அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே என் குழந்தைகளுக்கும், எனது திருமண வாழ்க்கையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே கணவருக்கு நிரந்தர குடியுரிமை விசா வழங்க வேண்டும்' என இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
ராபியாவின் மனுவை விசாரணைக்கு ஏற்ற, லாகூர் ஹைகோர்ட்டு நீதிபதி இஜாசூல் அசான் வழக்கை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், விசாரணை முடியும் வரையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரை பாகிஸ்தானை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் ஈடுபட கூடாது என்றும் அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications