பாகிஸ்தானின் மிகப் பெரிய சதி அம்பலம்.. இந்தியா மீது பழி போட திட்டம்? இதை பார்த்தால் புரியும்
லாகூர்: பொதுவாக இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உருவானால் முதலில் ஒரு அரசு செய்ய வேண்டியது தங்களது வான் வழியை மூடுவது தான். எந்த இடத்தில் போர் ஆபத்து இருக்கிறதோ, அந்த இடத்தில் விமானங்கள் செல்ல அனுமதி அளிக்கக் கூடாது.
இதற்கு காரணம் ஏதேனும் வான்வழி தாக்குதலில் விமானங்கள் சிக்கி விடக்கூடாது என்பதுதான். இந்த சூழலில் பாகிஸ்தான் தொடர்ந்து ட்ரோன்கள் மூலம் இந்தியாவில் எல்லையோர மாநிலங்களில் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனை அடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையோரத்தில் இருக்கும் மாநிலங்களில் 32 விமான நிலையங்களை மூடி இருக்கிறது. மேலும் பாகிஸ்தான் எல்லையோர பகுதிக்கு எந்த ஒரு விமானங்களும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய எல்லையோர பகுதிகளில் பயணிகள் விமானத்தை இயக்கி வருகிறது.
இது தொடர்பாக இந்தியா ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் குற்றச்சாட்டியது. அதில் பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக இந்தியா கூறியிருந்தது. இந்த நிலையில் இன்று இரவு மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், விமான போக்குவரத்தை கண்காணிக்கும் செயலியில் பாகிஸ்தானின் இந்த சதித்திட்டம் அம்பலமாக இருக்கிறது.
இதில் இந்தியா பகுதிகளில் எந்த ஒரு விமானமும் செல்லவில்லை. ஆனால் பாகிஸ்தானில் மட்டும் பல விமானங்கள் இந்திய எல்லையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்தியா ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தாமல் அமைதி காத்து வருகிறது. இந்த நிலையில் தான் பாகிஸ்தானே தங்களது விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டு அதை இந்தியா மீது பழி போட்டுவிட தான் இவ்வாறு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் தான் போர் நடக்கும் பகுதியில் பயணிகள் விமானங்களை பாகிஸ்தான் வேண்டுமென்றே அனுமதி அளிக்கிறது என்று கூறப்படுகிறது. தாங்களே சுட்டு வீழ்த்தி விட்டு இந்தியா தான் செய்தது என்று கூறி உலக நாடுகளுக்கு மத்தியில் விக்டீம் கார்டை பயன்படுத்த பாகிஸ்தான் முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.போரில் பின்னடைவை சந்திக்கும் பாகிஸ்தான் ராணுவம், இப்படி உள்ளடி வேலை செய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் உலக நாடுகள் உடனடியாக பாகிஸ்தானை பயணிகள் விமானத்தை எல்லையோர பகுதிகளில் செல்ல தடை விதிக்க வற்புறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications