Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவை எப்படி அடிச்சோம் பாருங்க.. பாகிஸ்தான் பிரதமரை முட்டாளாக்கிய ராணுவ தளபதி.. போட்டோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ‛‛இப்படி தான் நாம் இந்தியாவை தாக்கினோம்'' என்று பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீர் அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்புக்கு போட்டோ ஒன்றை பரிசளித்தார். இதன்மூலம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பை, அசீம் முனீர் முட்டாளாக்கி உள்ளார். இதற்கு அவர் பரிசாக கொடுத்த போட்டோ தான் முக்கிய காரணம். இந்த போட்டாவை பார்த்து தற்போது உலகமே கைகொட்டி சிரித்து வருகிறது. அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சனை இருந்தாலும் கூட எல்லையில் அமைதி நிலவி வந்தது. ஆனால் இந்த அமைதி கடந்த மாதம் 22ம் தேதி சீர்க்குலைந்தது. இதற்கு முக்கிய காரணம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தான்.

pakistan shefbaz Sharif Asim Munir

இதற்கு நம் நாடு கடந்த 7 ம் தேதி பதிலடி கொடுத்தது. நம் நாட்டின் தாக்குதல் என்பது ஆக்ரோஷமாகவும், துல்லியமாகவும் இருந்தது. இந்த தாக்குதல் என்பது 10ம் தேதி வரை நீடித்தது. பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள், 3 விமான தளங்களை நம் நாடு சல்லி சல்லியாக சிதறடித்தது. பாகிஸ்தான் நம்மை தாக்க முயன்று தோற்றுப்போனது.

இதனால் பாகிஸ்தான் சமாதான கொடி தூக்கியது. வெள்ளை கொடி வேந்தனாக அந்த நாட்டின் ராணுவ நடவடிக்கைக்கான ஜெனரல் நம் நாட்டை தொடர்பு கொண்டு சண்டையை நிறுத்தும்படி கெஞ்சினார். இருதரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தாக்குதலை நிறுத்த நம் நாடு ஒப்புக்கொண்டது. இதையடுத்து இருநாடுகள் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. ஆனால் நம் நாடு 3 நாட்களில் கொடுத்த அடி என்பது பாகிஸ்தானுக்கு பயங்கரமாக இருந்தது. பல ஆயிரம் கோடிக்கு பாகிஸ்தானுக்கு சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி நம்மிடம் மண்டியிட்ட பாகிஸ்தான், மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசி வருகிறது. நம்மிடம் அடிவாங்கியதை மறைத்து பொய்களை பிரசாரம் செய்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் மோதலில் இந்தியா தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மண்ணை கவ்வியது. பாகிஸ்தான் அதிக சேதத்தை சந்தித்தது என்று பல டிபென்ஸ் எக்ஸ்பர்ட்டுகளும், சர்வதேச ஊடகங்களும் கூறிவிட்டன. ஆனால் பாகிஸ்தான் தனது மானத்தை காப்பாற்ற பொய்களை பரப்பி மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறது.

இந்நிலையில் தான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பை, அந்த நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீர் முட்டாளாக்கி உள்ளார். அதாவது நம்மிடம் தோற்றதை மறைக்க வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் போர் வெற்றியை கொண்டாடுகிறோம் என்று கூறி டின்னர் விருந்துக்கு ஏற்பாடு செய்தது.
டின்னரில் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர், உளவுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், ராணுவ உயரதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

pakistan shefbaz Sharif Asim Munir

இந்த டின்னரில் ராணுவ தளபதி அசிம் முனீர், பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்புக்கு ஒரு போட்டோவை பரிசளித்தார். அதில் லாஞ்சரில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேற ஏவுகணைகள் சீறிப்பாய்கின்றன. இந்த போட்டோவை தான் அசீம் முனீர், ஷெபாஷ் ஷெரீப்புக்கு பரிசாக வழங்கினார். அதாவது, இந்தியாவை இப்படித்தான் தாக்கி வென்றோம். நம் நாட்டின் படைகள் ஏவுகணைகளை இந்தியாவை நோக்கி ஏவியது இப்படித்தான் என்று கூறி அந்த போட்டோவை வழங்கினார்.

இந்த போட்டோ தான் இப்போது பேசும் பொருளாகி உள்ளது. ஏனென்றால் இந்த போட்டோ என்பது ரொம்ப பழைய போட்டோவாகும். இது இப்போது எடுக்கப்பட்டது இல்லை. இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தானுக்கும் இந்த போட்டோவுக்கும் சம்பந்தமே கிடையாது. இதுதான் தற்போது உலக நாடுகளை சரிக்க வைத்துள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் என்று கூட பாராமல் ஷெபாஷ் ஷெரீப்பை ராணுவ தளபதி அசீம் முனீர் ஏமாற்றிவிட்டாரே. இதில் அசீம் முனீர் புத்திசாலியா, இல்லை ஷெபாஷ் ஷெரீப் முட்டாளா என்ற அளவுக்கு வாதம் போய் கொண்டிருக்கிறது.

சரி இது இருக்கட்டும். ஷெபாஷ் ஷெரீப்புக்கு, அசீம் முனீர் வழங்கிய போட்டோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற கேள்வி இப்போது உங்களுக்கு வரலாம். இதற்கு விடை என்னவென்றால் அது சீனாவில் எடுக்கப்பட்டது. அதாவது சீன ராணுவத்தில் PHL-03 என்று பிரமாண்ட ராக்கெட் லாஞ்சர் உள்ளது.

ஏவுகணை போன்ற பெரிய அளவிலான ராக்கெட் குண்டுகளை இதை வைத்து ஏவ முடியும். ஒரே நேரத்தில் பல ராக்கெட் குண்டுகளை வீசும் சக்தி இதற்கு உண்டு. சீன ராணுவத்தினர் கடந்த 2019ல் பிஎச்எல் -03 ராக்கெட் லாஞ்சரை வைத்து பயிற்சி மேற்கொண்டனர். அப்போது எடுத்த இந்த போட்டோவை தான் இப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர், அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்புக்கு பரிசாக வழங்கி ஏமாற்றி உள்ளார். இதனால் பாகிஸ்தான் ட்ரோல் மெட்டீரியலாக மாறி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+