பாஜக எம்எல்ஏ பாடிய ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் பாட்டு.. எங்க பாட்டோட காப்பி.. பாக்.ராணுவம் புகார்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ராம் நவமிக்காக பாஜக எம்எல்ஏ தாகூர் ராஜா சிங் பாடிய, ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் பாடல், தங்களிடம் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது.

பாஜகவை சேர்ந்த தாகூர் ராஜா சிங் லாத், தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் உள்ள கோசாமஹால் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்ற பெயரில் ஒரு பாடலை அவரே பாடி, அதனை தனது டுவிட்டரில் வெளியிட்டார்.

Pakistan Army claims BJP MLAs patriotic song on Ram Navami

ராம் நவமிக்காக இந்த பாடலை இந்திய ராணுவத்திற்கு அர்பணிப்பதாக கூறி தாகூர் ராஜா சிங் தனது டுவிட்டரில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வீடியோவை பாகிஸ்தானின் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிப் காபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து அதற்கு மேல், இந்த வீடியோ பாகிஸ்தான் ராணுவத்துக்காக வெளியிடப்பட்ட பாகிஸ்தான் ஜிந்தபாத்தின் காப்பி என தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 23ம் தேதி பாகிஸ்தான் தினத்திற்காக தொலைக்காட்சிகளில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' பாடல் வெளியிடப்பட்டது. அந்த பாடலைத்தான் பாஜக எம்எல்ஏ காப்பி அடித்து 'இந்தியா ஜிந்தாபாத்' என பாடி வெளியிட்டுள்ளார் என பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் குற்றம்சாட்டி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+